சதிலீலாவதி
சதிலீலாவதி | |
---|---|
இயக்கம் | எல்லிஸ் டங்கன் |
தயாரிப்பு | மனோரமா பிலிம்ஸ் |
கதை | கதை எஸ். எஸ். வாசன் |
நடிப்பு | எம். கே. ராதா எம். ஜி. ஆர் டி. எஸ். பாலையா என். எஸ். கிருஷ்ணன் எம். எஸ். ஞானாம்பாள் |
வெளியீடு | மார்ச்சு 28, 1936 |
ஓட்டம் | . |
நீளம் | 18000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
சதிலீலாவதி (Sathi Leelavathi) 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எம். ஜி. ஆர் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
ஆனந்த விகடன் இதழில் சுப்பிரமணியம் சீனிவாசன் புதினத்தை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். 1935ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்திருந்தாலும், வழக்கின் காரணமாக இந்தத் திரைப்படத்தின் வெளியீடு தாமதமானது. பின்னர், 28 மார்ச் 1936 ஆம் தேதி படம் வெளியானது.[1][2] இந்த திரைப்படத்தின் ஒளிநாடா இருப்பதாக அறியப் படவில்லை.[3]
நடிகர்கள்
- எம். கே. ராதா
- டி. எஸ். பாலையா
- ம. கோ. இராமச்சந்திரன்
- எம். வி. மணி
- எம். கே. மணி
- பி. நம்மாழ்வார்
- டி. என். லட்சுமண ராவ்
- பி. என். ராமகிருஷ்ணன்
- எம். ஆர். ஞானாம்பாள்
- தனலட்சுமி
- சாந்தகுமாரி
- எம். சந்திர பாய்
- எம். எஸ். முருகேசன்
- என். எஸ். கிருஷ்ணன்
- எஸ் சுந்தரராம்
கதைச்சுருக்கம்
சென்னையில் செல்வந்தர் கிருஷ்ணமூர்த்தி தன் மனைவி லீலாவதி மற்றும் மகள் லட்சுமியுடன் வாழ்ந்து வருகிறார். தன் நண்பன் ராமநாதன் மூலமாக மது மற்றும் சூதாட்டத்திற்கு அறிமுகம் கிடைக்கிறது. பின்னர் மோகனாங்கி என்ற பெண் வாசம் ஆசை கொள்வதால் அவளுக்கு ரூபாய் 50000 தருவதாக வாக்கு கொடுக்கிறார் கிருஷ்ணமூர்த்தி.
கிருஷ்ணமூர்த்தியின் நண்பன் பரசுராமன் அவரை நல்வழிப்படுத்த முயற்சி செய்கிறார். அந்த ஆடம்பரமான வாழ்க்கைக்காக கிருஷ்ணமூர்த்தி வாங்கிய கடனை கட்ட இயலாததால் மேலும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிறார். அதன் பின்விளைவாக தன் மனைவி லீலாவதியை சந்தேகிக்கிறார்.
பின்னர் ஒரு சமயம் குடிபோதையில் கிருஷ்ணமூர்த்தி இருக்கும்பொழுது, தன் நண்பன் பரசுராமனை தான்தான் கொன்று விட்டதாக தவறாக நினைத்து, மனைவி மற்றும் மகளை கோவிந்தனிடம் விட்டுவிட்டு ஸ்ரீலங்காவிற்கு தப்பிச் சென்று, ஒரு தேயிலை தோட்டத்தில் வேலை செய்கிறார் கிருஷ்ணமூர்த்தி. லீலாவதி மற்றும் லட்சுமி இருவரும் வறுமையில் வாடுகிறார்கள். பின்னர் என்னவானது என்பதே மீதி கதையாகும்.[4]
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ "http://sangam.org". http://sangam.org/mgr-remembered-part-7/.
- ↑ "Rajadhyaksha & Willemen 1998, p. 92.". https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf.
- ↑ "https://www.thehindu.com". https://www.thehindu.com/books/books-authors/another-anandan-in-the-making/article19593507.ece.
- ↑ "http://tamildigitallibrary.in". http://tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0008620_%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF.pdf.