நீர்க்குமிழி (திரைப்படம்)
நீர்க்குமிழி | |
---|---|
இயக்கம் | கே. பாலச்சந்தர் |
தயாரிப்பு | ஏ. கே. வேலன் திருமலை பிக்சர்ஸ் |
இசை | வி. குமார் |
நடிப்பு | வி. கோபாலகிருஷ்ணன் சௌகார் ஜானகி |
வெளியீடு | அக்டோபர் 23, 1965 |
நீளம் | 3991 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீர்க்குமிழி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்குநராக அறிமுகமானார்.[1] இது ஒரு மருத்துவமனையின் உள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் கதைகளை சித்தரிப்பதாக இருந்தது. இதே பெயரிலான பாலசந்தரின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவானது. இது 23 அக்டோபர் 1965 இல் வெளியானது. இப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி (1969),[2] மற்றும் மலையாளத்தில் ஆரடிமன்னிண்டே ஜன்மி (1972)[3] என மறு ஆக்கம் செய்யப்பட்டது.
கதை
அனாதை நோயாளியான சேது, மருத்துவமனையில் நோயாளிகள், செவிலியர், மருத்துவர்களிடம் என அனைவரிடமும் தொடர்ந்து கேலி விளையாட்டுகளில் ஈடுபடுகிறார். தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணன் (மேஜர் சுந்தர்ராஜன்) தன் மகள் மருத்துவர் இந்திராவை (சோகார் ஜானகி) மருத்துவ ஆய்வுக்காக அமெரிக்கா அனுப்ப நினைக்கிறார். ஆனால் இந்திராவுக்கும், மருத்துவனையில் மருத்துவம் பார்த்துவரும், கால்பந்து வீரரான, அருணுக்கும் (வி. கோபாலகிருஷ்ணன்) இடையே காதல் உருவாகிறது. கால்பந்து வீரருக்கு பேராசை பிடித்த ஒரு சகோதரர் இருக்கிறார், அவர் தன் உடன்பிறந்தவரைக் கொல்ல ஏற்பாடு செய்கிறார். சேது, தன் இறுதிநாள் குறிக்கபட்டதை அறிந்தவுடன், தான் வாழும் குறுகிய காலத்தில் நல்லது செய்யலாம் என்று அவர்களின் காதலுக்கு உதவுகிறார். ஆனால் எல்லாம் நீர்க்குமிழி ஆகிறது என்பதுதான் கதை.
நடிகர்கள்
- சேதுவாக நாகேஷ்[4]
- மருத்துவர் இந்திராவாக சௌகார் ஜானகி [4]
- அருணாக வி. கோபாலகிருட்டிணன் [4]
- மருத்துவர் பாலகிருஷ்ணனாக மேஜர் சுந்தரராஜன்
- செவிலியராக ஜெயந்தி[4]
- நோயாளியாக ஐ.எஸ்.ஆர்
- எஸ். என். லட்சுமி
- செவிலியராக சோபா
தயாரிப்பு
அதுவரை திரைக்கதை ஆசிரியராக இருந்த கே. பாலசந்தர் இயக்குநராக அறிமுகமான படம் நீர்குமிழி. இப்படம் அதே பெயரிலான அவரது மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது.[5] இந்தப் படத்தை திருமலை பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் ஏ. கே. வேலன் தயாரித்தார். ஒளிப்பதிவை நிமய் கோஷ் மேற்கொண்டார், கலை இயக்கத்தை ரங்கண்ணா செய்தார்.[6] நாடகத்தின் கதையைக் கேட்ட ஏ. கே. வேலன் நாடகம் மேடையேறும் முன்பே திரைப்படமாக்க முன்வந்தார். படத்தை கே. பாலச்சந்தரையே இயக்கும்படி சொன்னார். திரைப்பட இயக்கம் பற்றிய அறிவு இல்லாததால் கே. பாலச்சந்தர் தயங்கினார். நாடகத்தை இயக்க முடிந்த உங்களால் திரைப்படத்தையும் இயக்க முடியும் என்று நம்பிக்கை அளித்த ஏ. கே. வேலன் அவலுக்கு நம்பிக்கை அளித்தார்.[7] நாடகத்தில் நடித்த சௌகார் ஜானகி, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், வி. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் திரைப்படத்திலும் பாத்திரங்களை ஏற்றனர்.[5][8] படத்தின் தலைப்பை மாற்றுமாறு நண்பர்களும், உறவினர்களும் தனக்கு அறிவுறுத்தியதாகவும் ஆனால் பிடிவாதமாக அதே தலைப்பை வைத்ததாகவும் பாலசந்தர் கூறினார்.[9]
இசை
கே. பாலச்சந்தரின் நடகங்களுக்கு இசையமைத்து வந்த இசையமைத்தவர் வி. குமார்,[10] இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்.[11]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "ஆடி அடங்கும் வாழ்கையடா" | சீர்காழி கோவிந்தராஜன் | 3:16 | |||||||
2. | "கன்னி நதியோரம்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 3:13 | |||||||
3. | "நீரில் நீந்திடும் மீனினமே" | பி. சுசீலா | 3:26 | |||||||
மொத்த நீளம்: |
9:55 |
வெளியீடும் வரவேற்பும்
நீர்க்குமிழி 23 அக்டோபர் 1965 அன்று,[6][12] தீபாவளி நாளில் வெளியானது.[11] ஆனந்த விகடன், நவம்பர் 14, 1965 தேதியிட்ட ஒரு விமர்சனத்தில், படத்தில் சில குறைபாடுகள் இருந்தபோதிலும், நாகேசுக்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம் என்று கூறியது.[13] ஸ்போர்ட் அண்ட் பேஸ்டைமில் எழுதிய, டி. எம். ராமச்சந்திரன் இந்த ஆண்டின் தனக்குப் பிடித்த தீபாவளியில் வெளிவந்த படம் என்று குறிப்பிட்டார், ஏனெனில் இது அசல் நாடகத்தை விட சிறந்ததாதாக இருந்ததாக குறிப்பிடும் அதே வேளையில், "திரை பொழுதுபோக்கில் இது ஒரு புதிய பாதையையைத் திறந்துள்ளது".[11] படத்தின் கதை மற்றும் நாகேசின் நடிப்பை கல்கி பாராட்டியது.[14]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1144954. பார்த்த நாள்: 19 June 2024.
- ↑ Jeyaraj, D. B. S. (4 August 2018). "The sweet and sour real life romance of reel actors Savitri and Gemini". Daily FT இம் மூலத்தில் இருந்து 9 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190209124651/http://www.ft.lk/columns/The-sweet-and-sour-real-life-romance-of-reel-actors-Savitri-and-Gemini/4-660242.
- ↑ "தமிழ் டூ மலையாளம் உண்டல்லோ?" (in ta). புதிய தலைமுறை (இதழ்): pp. 12. 16 July 2015.
- ↑ 4.0 4.1 4.2 4.3 ராஜகுமாரன், எஸ். (14 August 2015). "ஆடி அடங்கும் வாழ்க்கையடா! – 50 ஆண்டுகள் நிறைவு செய்த நீர்க்குமிழி" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 28 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210928114926/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/52796-50.html.
- ↑ 5.0 5.1 Randor Guy (3 May 2011). "The KB school". தி இந்து இம் மூலத்தில் இருந்து 4 April 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180404085651/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/the-kb-school/article1986770.ece.
- ↑ 6.0 6.1 "Neerkumizhi". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 23 October 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19651023&printsec=frontpage&hl=en.
- ↑
- ↑ Kolappan, B. (23 December 2014). "He took Tamil cinema beyond hero-centric creations". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170605172119/http://www.thehindu.com/entertainment/he-took-tamil-cinema-beyond-herocentric-creations/article6719996.ece.
- ↑ Balasubramanian, V. (18 February 2011). "Director felicitated". தி இந்து இம் மூலத்தில் இருந்து 12 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210712061529/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/Director-felicitated/article15448350.ece.
- ↑ "Neerkumizhi (Original Motion Picture Soundtrack) – Single". 1 December 1965 இம் மூலத்தில் இருந்து 6 February 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230206060730/https://music.apple.com/gb/album/neerkumizhi-original-motion-picture-soundtrack-single/1330388143.
- ↑ 11.0 11.1 11.2
- ↑ "1965 – நீர்க்குமிழி – திருமலை பிக்." (in Tamil) இம் மூலத்தில் இருந்து 8 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180308071424/http://www.lakshmansruthi.com/cineprofiles/1965-cinedetails28.asp.
- ↑ சேகர்; சந்தர் (14 November 1965). "சினிமா விமர்சனம்: நீர்க்குமிழி" (in ta) இம் மூலத்தில் இருந்து 23 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20201023132216/https://www.vikatan.com/arts/nostalgia/39542--2.
- ↑