விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற

திருவிளமர் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில்

கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருவிளமர்
பெயர்:திருவிளமர் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் கோயில்
அமைவிடம்
ஊர்:விளமல்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பதஞ்சலி மனோகரர்
தாயார்:மதுரபாஷிணி, யாழினும்மென்மொழியம்மை
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:அக்கினி தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்
வரலாறு
அமைத்தவர்:மீள் கட்டுமானம் - நாட்டுக்கோட்டை நகரத்தார்[1]

விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 90ஆவது சிவத்தலமாகும்.இத் தலத்தின் மீது பாடப்பெற்ற மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம் என்று தொடங்கும் பாடலை முதலாக உடைய தேவாரப் பதிகம் மூன்றாம் திருமுறையுள் அடங்குகிறது.

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அடங்கிய திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது.

வழிபட்டோர்

திருவாரூர் நகருக்கு அண்மையில் ஓடம்போக்கி என்னும் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இத்தலத்தில் பதஞ்சலி முனிவர் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.

மேற்கோள்கள்

  1. பண்டிதமணி கதிரேசன்செட்டியார் (1953). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு.

வெளி இணைப்புகள்

இவற்றையும் பார்க்க