கொல்லங்கோடு நகராட்சி
கொல்லங்கோடு | |||
— இரண்டாம் நிலை நகராட்சி — | |||
அமைவிடம் | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||
வட்டம் | விளவங்கோடு | ||
ஆளுநர் | [1] | ||
முதலமைச்சர் | [2] | ||
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப | ||
நகராட்சி தலைவர் | திருமதி. ராணி | ||
மக்கள் தொகை • அடர்த்தி |
40,136 (2011[update]) • 3,175/km2 (8,223/sq mi) | ||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
பரப்பளவு | 12.64 சதுர கிலோமீட்டர்கள் (4.88 sq mi) | ||
குறியீடுகள்
| |||
இணையதளம் | www.townpanchayat.in/kollemcode |
கொல்லங்கோடு (Kollankodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது 16 அக்டோபர் 2021 அன்று பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டது . இந்த நகராட்சியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தூக்கத் திருவிழா கொண்டாடப்படுகிறது. [3]
2021-இல் கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைத்தல்
கொல்லங்கோடு மற்றும் ஏழுதேசம் பேரூராட்சிகளைக் கொண்டு 16 அக்டோபர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்ட கொல்லங்கோடு நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. [4][5]
அமைவிடம்
கொல்லங்கோடு நகராட்சி கன்னியாகுமரியிலிருந்து 51 கிமீ தொலைவிலும், நாகர்கோவிலிருந்து 52 கிமீ தொலைவிலும் கடற்கரையை ஒட்டியுள்ளது. அருகமைந்த ஊர்கள் மேற்கில் திருவனந்தபுரம் 35 கிமீ; வடக்கில் பாறசாலை 9 கிமீ; தெற்கில் மேடவிளாகம் 0.50 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் பாறசாலையில் உள்ளது.
நகராட்சியின் அமைப்பு
12.64 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
நகராட்சியின் அலுவலர்கள்
பொறுப்பு | பெயர் |
நகராட்சி ஆணையர் | திருமதி. ராமதிலகம் |
நகராட்சி தலைவர் | திருமதி. ராணி |
நகராட்சி துணைத்தலைவர் | திருமதி. பேபி |
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 8514 வீடுகளும், 38385 மக்கள்தொகையும் கொண்டது. [7][8]
இதனையும் காண்க
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்கத்திருவிழா". Archived from the original on 2019-03-23. பார்க்கப்பட்ட நாள் 2019-03-23.
- ↑ தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது
- ↑ kumbakonam corporaon and 19 muniicipalites
- ↑ கொல்லங்கோடு பேரூராட்சியின் இணையதளம்
- ↑ கொல்லங்கோடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
- ↑ https://www.citypopulation.de/php/india-tamilnadu.php?adm2id=3328
வெளி இணைப்புகள்