எழுத்தியல் (நன்னூல்)
Jump to navigation
Jump to search
பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் எழுத்ததிகாரத்தின் ஐந்து பகுதிகளில் முதலாவது பகுதி எழுத்தியல் ஆகும். இதில் கடவுள் வணக்கம் எனத் தொடங்கி, எழுத்திலக்கணத்தின் 12 கூறுகள் எழுதப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றையும் விளக்கும் நூற்பாக்கள் (58-126), புறனடை நூற்பா (127) என மொத்தம் 72 நூற்பாக்கள் உள்ளன.
கடவுள் வணக்கம்
பூக்கள் நிறைந்த அசோக மரத்தினது அலங்கரிக்கப்பட்ட நிழலில் அமர்ந்திருக்கும் பிரம்ம தேவனை வணங்கி நான் இந்நூலில் எழுத்திலக்கணத்தை நன்றாகக் கூறுவேன் என்று கடவுள் வாழ்த்துப் பாடலுடன் நன்னூலில் எழுத்திலக்கணம் தொடங்குகிறது.[1]:
எழுத்திலக்கணத்தின் கூறுகள்
எழுத்திலக்கணத்தின் கூறுகளாக எழுத்தியலில் குறிப்பிடப்படும் பன்னிரு கூறுகள்[2]:
- 1. எண்
- 2. பெயர்
- 3. முறை
- 4. பிறப்பு
- 5. உருவம்
- 6. மாத்திரை
- 7. முதல் நிலை
- 8. இறுதிநிலை
- 9. இடைநிலை மயக்கம்
- 10.போலி
- 11.பதம்
- 12.புணர்ச்சி
என்பனவாகும்.