மடற்பனையின் இயல்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மடற்பனையின் இயல்பு என்பது கூரிய கருக்கு மடல்களையுடைய பனை மரத்தின் இயல்பு ஓர் நல்லாசிரியனுக்கு இருக்கக்கூடாது என்ற கருத்தைக் கூறும் நன்னூல் வரியாகும்.

கூர்மையான கருக்கு மடல்களுடைய பனைமரமானது தானே தன்னிடம் உள்ள பழங்களையும் காய்களையும் உதிர்த்தால்தான் நாம் அதைப்பெற்றுக் கொள்ளமுடியும். மாறாக அவற்றை மரத்தில் ஏறி பறித்துக்கொள்ளல் என்பது இயலாத செயலாகும். அதுபோல மாணவர்கள் நாடிச் சென்று, நெருங்கிப் பழகி, உரையாடி, நூற்பொருளை அறிய இடம் கொடாமல். தம்மிடம் உள்ள கல்விச்செல்வத்தை தானேதான் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நல்லாசிரியர் ஆகார் என நன்னூல் விளக்கிக் கூறுகிறது.[1]

அடிக்குறிப்புகள்

  1. . தானே தரக்கொளின் அன்றித் தன்பால்
    மேவிக் கொளப்படா இடத்தது மடற்பனை. - நன்னூல் 33

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மடற்பனையின்_இயல்பு&oldid=20152" இருந்து மீள்விக்கப்பட்டது