சூத்திர வகை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சூத்திர வகை என்பது சூத்திரங்களின் ஆறு வகைகள் யாவை என்பதை விளக்கும் நன்னூல் நூற்பாவாகும்.

பல திறப்பொருள்களையும் உள்ளடக்கிப் பொதுவாக அமையும் பிண்டச் சூத்திரம், அவ்வாறு பொதுவாகக் கூறப்பட்ட பல திறப் பொருள்களையும் தொகுத்துக் கூறும் தொகைச் சூத்திரம், தொகுத்துச் சொல்லப்பட்டவற்றைப் பின்னர் வகுத்துக் கூறும் வகைச் சூத்திரம், வகுத்துக் கூறப்பட்டவற்றைப் பின்னர் குறிப்பிட்டுச் சொல்லும் குறிச் சூத்திரம், செயன்முறையையும் முடிவுகளையும் அறிவிக்கும் செய்கைச் சூத்திரம், இதுவரை கூறப்பட்ட சூத்திரங்களுக்கு விதிவிலக்குகள் யாவை என்பதைச் சொல்லும் புறனடைச் சூத்திரம் எனச் சூத்திரங்கள் ஆறு வகைப்படும்.[1]


அடிக்குறிப்புகள்

  1. பிண்டம் தொகைவகை குறியே செய்கை
    கொண்டியல் புறனடைக் கூற்றன சூத்திரம்.- நன்னூல் 20

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சூத்திர_வகை&oldid=20273" இருந்து மீள்விக்கப்பட்டது