சிறப்புப் பாயிர இலக்கணம்
Jump to navigation
Jump to search
சிறப்புப் பாயிர இலக்கணம் என்பது பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலின் ஒரு பகுதி. இப்பகுதியில் ஒரு நூலுக்கு அத்தியாவசியமான சிறப்புப் பாயிரத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் 9 நூற்பாக்களில் சிறப்புப் பாயிரத்தின் இலக்கணமானது கீழுள்ள வகைகளில் தரப்பட்டுள்ளன:
- சிறப்புப்பாயிரம் பொதுவிதி (நூற்பா எண்: 47, 48)
- நூலுக்குப் பெயரிடும் முறை (49)
- நூல்யாப்பு நான்குவகை (50)
- சிறப்புப்பாயிரம் செய்தற்கு உரியவர்கள் (51)
- சிறப்புப்பாயிரம் பிறர்செய்யக் காரணம் (52)
- தற்புகழ்ச்சி தகும் இடங்கள் (53)
- பாயிரத்தின் இன்றியமையாமை(54)
- அணிந்துரை (55)