மாணாக்கர் இலக்கணம்
Jump to navigation
Jump to search
மாணாக்கர் இலக்கணம் என்று நன்னூலில் எவரெல்லாம் பாடம் கேட்பதற்குரிய மாணாக்கர் ஆவர் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
- தன்மகன்,
- தன்னுடைய ஆசிரியருடைய மகன்,
- நாட்டையாளும் அரசனுடைய மகன்,
- பொருளை மிகுதியாக வாரிவழங்குபவன்,
- தன்னை வணங்கி வழிபடுபவன்,
- சொல்லும் பொருளை விரைந்து ஏற்றுக் கொள்ளும் திறனுடையோன்
ஆகிய அறுவருக்கே நூலைக் கற்பிக்க வேண்டும். இவர்களே மாணாக்கர் ஆவதற்கு தகுதியுள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது[1]
தன்மக னாசான் மகனே மன்மகன்
பொருணனி கொடுப்போன் வழிபடு வோனே
உரைகோ ளாளற் குரைப்பது நூலே . - நன்னூல் 37 (மூலம்)
முதற்றர மாணவர்கள் - அன்னப்பறவையும் பசுவையும் போன்றவர்.
நடுத்தர மாணவர்கள் - மண்ணையும் கிளியையும் போன்றவர்.
கடைத்தர மாணவர்கள் - ஓட்டைக்குடத்தையும் ஆட்டையும் எருமையையும் பன்னாடையையும் போன்றவர்.
அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர். - நன்னூல் 38 (மூலம்)
அடிக்குறிப்புகள்