நிலத்தின் மாண்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

நிலத்தின் மாண்பு என்று நன்னூல் நிலத்தின் நற்பண்புகளைக் கூறி அவையாவும் ஒரு நல்ல ஆசிரியருக்கும் இருக்க வேண்டும் என்கிறது.

பிறரால் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு மிகவிரிந்த உருவப்பரப்பும், வலிமையும், பொறுமையும், தக்க பருவத்தில் மேற்கொள்ளப்படும் முயற்சியின் அளவுக்கு ஏற்பப் பயன் தரும் குணமும் ஆகியவை அனைத்தும் நிலத்தின் மாண்புகளாகும்.

பிறரால் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு கல்விப் பெருமையும், தன்மேல் விழுந்த பொருள்களைக் கலங்காமல் வலிமையாகத் தாங்கும் நிலம்போலத் தன்னை நெருங்கிவந்தவரால் கலங்காத அளவு மனத்திண்மையும், தீங்கிழைத்தவருக்கும் நன்மையே செய்யும் நிலம்போல் மாணாக்கர் தீங்கிழைத்தாலும் பொறுமை காத்து நன்மை செய்யும் மனப்பாங்கும், மாணாக்கரின் அறிவு, உழைப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப அவர்களுக்குப் பயன் தருதலும் ஆகிய நற்குணங்கள் நிரம்பியவரே நல்லாசிரியர் எனப்படுவார்.[1]

அடிக்குறிப்புகள்

  1. தெரிவரும் பெருமையுநம் திண்மையும் பொறையும்
    பருவம் முயற்சி அளவிற் பயத்தலும்
    மருவிய நன்னில மாண்பா கும்மே. - நன்னூல் 27

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=நிலத்தின்_மாண்பு&oldid=20146" இருந்து மீள்விக்கப்பட்டது