வழிநூல்
Jump to navigation
Jump to search
தமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இலக்கண நூல்கள் வகைப்படுத்திப் பார்க்கின்றன.
- தொல்காப்பியப் பார்வை
தொல்காப்பியம் நூல்களை முதல்நூல், வழிநூல் என இரண்டாக வகைப்படுத்துகிறது. [1]
வழிநூல் முதல்நூலின் வழியே தோன்றும் நூல் என்கிறது. [2]
தொல்காப்பியம் வழிநூலை
- முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
- முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
- முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
- முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்
என மேலும் நான்கு வகைப்படுத்திப் பார்க்கிறது. [3] [4]
- நன்னூல் பார்வை
நன்னூல் நூலை மூன்று வகைப்படுத்துகிறது.
- முதல்நூல்,
- வழிநூல்,
- சார்புநூல்
என்பன அவையாகும். [5]
- வழிநூல் - முதல்நூலின் கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் சில வேறுபாடுகளைக் கூட்டிக் கூறுவது வழிநூல். [6]
- சார்பு-நூல் என்னும் புடைநூல் - முதல்நூலில் ஒரு பகுதியையும், வழிநூலின் ஒரு பகுதியையும் ஏற்றுக்கொண்டு, அவர்களோடு மாறுபட்டுக் கூறும் நூல் புடைநூல் எனப்படும். [7]
அடிக்குறிப்பு
- ↑
மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,
உரை படு நூல்தாம் இரு வகை இயல
முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639) - ↑ வழி எனப்படுவது அதன் வழித்து ஆகும். (தொல்காப்பியம் 3-641)
- ↑ வழியின் நெறியே நால் வகைத்து ஆகும் (தொல்காப்பியம் 3-642)
- ↑
தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து
அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே.(தொல்காப்பியம் 3-643) - ↑ முதல் வழி சார்பு என நூல் மூன்று ஆகும் (நன்னூல் 5)
- ↑
முன்னோர் நூலின் முடிபு ஒருங்கு ஒத்துப்
பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
அழியா மரபினது வழிநூல் ஆகும் (நன்னூல் 7) - ↑
இருவர் நூற்கும் ஒருசிறை தொடங்கித்
திரிபு வேறு உடையது புடைநூல் ஆகும் (நன்னூல் 8)