பத்து அழகுகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பத்து அழகுகள் என்பவை ஒரு நூலை அலங்கரிப்பதற்கு அந்நூலில் இருக்கவேண்டிய பத்துவகை அழகுகள் யாவை என்பதை நன்னூல் கூறுகிறது.

  1. கூறவந்த பொருளைச் சொற்கள் விரியாமல் சுருக்கமாகக் கூறவேண்டும்.
  2. சுருக்கமாகச் சொன்னாலும் பொருளைத் தெளிவாக விளங்க வைக்க வேண்டும்.
  3. படிப்பவருக்கு இனிமை தரும்படி சொல்ல வேண்டும்.
  4. நூலில் நல்ல சொற்களைச் சேர்த்துச் சொல்ல வேண்டும்.
  5. சந்த இன்பம் இருக்குமாறு நூலை அமைக்க வேண்டும்.
  6. ஆழ்ந்த கருத்துகள் உடையதாக நூல் இருக்க வேண்டும்.
  7. கூறும் கருத்துகளைக் காரண காரிய முறைப்படி தொகுத்துக் கூறவேண்டும்.
  8. உயர்ந்தோர் கருத்தோடு மாறுபடாமல் கூறவேண்டும்.
  9. மிகச்சிறந்த பொருளைத் தருகின்ற நூலாக அது இருக்கவேண்டும்.
  10. கூறவந்த பொருளை விளக்க ஆங்காங்கே எடுத்துக்காட்டுகள் தரப்படவேண்டும், ஆகிய பத்தும் நூலுக்கு இருக்கவேண்டிய அழகுகள் என்று நன்னூல் கூறுகிறது.[1]

அடிக்குறிப்புகள்

  1. சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
    நவி்ன்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
    ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல்
    முறையின் வைப்பே உலகமலை யாமை
    விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்தது
    ஆகுதல் நூலிற்கு அழகெனும் பத்தே. - நன்னூல் 13

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பத்து_அழகுகள்&oldid=20268" இருந்து மீள்விக்கப்பட்டது