ஆசிரியர் ஆகாதவர் இலக்கணம்
Jump to navigation
Jump to search
ஆசிரியராகாதார் இலக்கணம் என்று நன்னூல் ஆசிரியர் எனக்கொள்ளக் கூடாதவர்களை அடையாளம் காட்டுகிறது.
நல்லாசிரியராகக் கருதுவதற்கு நன்னூல் கூறிய நற்பண்புகள் இல்லாதவர் அனைவரும் நல்லாசிரியராகார். தான் கற்றவற்றை உள்ளபடியே பாடம் சொல்லும் குணம் இல்லாதவரும், பொய் பேசுதல் போன்ற இழிந்த குணங்களை இயற்கையிலேயே கொண்டிருப்பவரும், அஞ்சத்தகாத செயல்களுக்கு அஞ்சுபவரும், பொறாமை, ஆசை, வஞ்சனை, அச்சம் முதலியவை தோன்றப் பேசுபவராய் இருத்தலும் கழல் பெய்த குடம், மடல்களையுடைய பனைமரம், பருத்திக் குண்டிகை, முடத்தெங்கு ஆகியவற்றிற்கு ஒப்பாக இருப்பவரும் ஆசிரியராகார் என்று நன்னூல் அடையாளம் காட்டுகிறது.[1]