அவள் ஒரு தொடர்கதை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அவள் ஒரு தொடர்கதை
அவள் ஒரு தொடர்கதை
இயக்கம்கே. பாலச்சந்தர்
தயாரிப்புராம அரங்கண்ணல்
(ஆண்டாள் பிலிம்ஸ்)
கதைஎம். எஸ். பெருமாள்
திரைக்கதைகே. பாலச்சந்தர்
வசனம்கே. பாலச்சந்தர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசுஜாதா
ஜெய்கணேஷ்
கமல்ஹாசன்
ஸ்ரீபிரியா
படாபட் ஜெயலட்சுமி
ஒளிப்பதிவுபி. எஸ். லோகநாத்
படத்தொகுப்புஎன். ஆர். கிட்டு
விநியோகம்அருள் பிலிம்ஸ்
வெளியீடுநவம்பர் 13, 1974
நீளம்4554 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அவள் ஒரு தொடர்கதை (Aval Oru Thodar Kathai) 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுஜாதா, ஜெய்கணேஷ், கமல்ஹாசன், படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 25 வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. இப்படம் வெற்றியை தொடர்ந்து மேலு‌ம் தெலுங்கு, பெங்காலி, இந்தி, கன்னடம் ஆகிய இந்திய மொழிகளில் இத்திரைப்படம் மீண்டும் எடுக்கப்பட்டது.

இத்திரைப்படமானது வானொலியில் பணியாற்றிய எழுத்தாளர் சுகி சுப்பிரமணியத்தின் மகனான எம்.எஸ்.பெருமாள் எழுதிய வாழ்க்கை அழைக்கிறது என்ற குறுநாவல்தான் அவள் ஒரு தொடர்கதை என்ற பெயரில் படமாகியது. பாலசந்தர் திரைக்கதை, வசனம் எழுதினார்.[1]

கதைச்சுருக்கம்

வேலைக்குச் செல்லும் பெண்களின் பிரச்சினையை மையமாகக் கொண்ட இத்திரைப்படத்தில் தனது குடும்பத்துக்காக, திருமணம் செய்து கொள்ளாமல், வேலைக்குச் செல்லும் பெண்ணாக சுஜாதா நடித்திருந்தார். கமலஹாசன் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.[2]

நடிகர்கள்

பாடல்கள்

அவள் ஒரு தொடர்கதை
ஒலிப்பதிவு
வெளியீடு1974 (1974)
மொழிதமிழ்

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன், அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் ம. சு. விசுவநாதன்

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "அடி என்னடி உலகம்"  எல். ஆர். ஈசுவரி  
2. "கடவுள் அமைத்து வைத்த"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
3. "கண்ணில் என்ன"  எஸ். ஜானகி  
4. "தெய்வம் தந்த வீடு"  கே. ஜே. யேசுதாஸ்  
5. "ஆடுமடி தொட்டில்"  பி. சுசீலா  

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அவள்_ஒரு_தொடர்கதை&oldid=30255" இருந்து மீள்விக்கப்பட்டது