வடமதுரை

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 06:58, 10 மார்ச்சு 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

வடமதுரை (ஆங்கிலம்:Vadamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

வடமதுரை பேரூராட்சி திண்டுக்கல் - திருச்சி செல்லும் சாலையில், திண்டக்கல்லிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 18,010 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 25.90 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 56 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°28′N 78°05′E / 10.47°N 78.08°E / 10.47; 78.08 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 275 மீட்டர் (902 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,418 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வடமதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வடமதுரை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. வடமதுரை பேரூராட்சியின் இணையதளம்
  2. "Vadamadurai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=வடமதுரை&oldid=198530" இலிருந்து மீள்விக்கப்பட்டது