தேவா
Jump to navigation
Jump to search
தேவா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | நவம்பர் 20, 1950[1] தமிழ்நாடு, இந்தியா |
தொழில்(கள்) | இசையமைப்பாளர், பாடகர் |
தேவா (நவம்பர் 20, 1950) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும். இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளது. தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர். இவர் தேனிசைத் தென்றல் என்று அழைக்கப்படுகிறார்.[2]
இவருடைய மகன் ஸ்ரீகாந்த் தேவா, சுமார் 80-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.பெற்றோர் பெயர் சொக்கலிங்கம்-கிருஷ்ணவேணி
இசையமைத்த திரைப்படங்களில் சில
தமிழ்த் திரைப்படங்கள்
திரையில் தோன்றியவை
ஆண்டு | திரைப்படம் | குறிப்புகள் |
---|---|---|
1998 | உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் | அவராகவே |
1999 | சின்ன ராஜா | அவராகவே |
2004 | அடி தடி | "தகடு தகடு" பாடலில் சிறப்புத் தோற்றம் |
2009 | மோதி விளையாடு | "மோதி விளையாடு" பாடலில் சிறப்புத் தோற்றம் |
மேற்கோள்கள்
- ↑ http://www.filmibeat.com/celebs/deva/biography.html
- ↑ கல்யாணி பாண்டியன், தொகுப்பாசிரியர் (20 நவம்பர் 2020). அஜித், விஜய் முதல் ரஜினி வரை: 90ஸ் கிட்ஸ்களின் நினைவில் நீங்கா தேவாவின் திரையிசை!. புதியதலைமுறை தொலைக்காட்சி. http://www.puthiyathalaimurai.com/newsview/86831/From-Ajith-Vijay-to-Rajini-music-director-deva-life-journey.
- ↑ http://www.filmibeat.com/celebs/deva/filmography.html