அப்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அப்பு
திரைப்பட அட்டை
இயக்கம்வசந்த்
நடிப்புபிரசாந்த்
தேவயானி
பிரகாஷ்ராஜ்
தாமு
வெளியீடு2009 (2009)
நாடு இந்தியா
மொழிதமிழ்

அப்பு (Appu) 2000 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] வசந்த் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் பிரசாந்த், தேவயானி, பிரகாஷ்ராஜ் போன்ற நடிகர்கள் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் டாக்ஸி டிரைவர் என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் பாணியில் சில காட்சியமைப்புகள் உள்ளன.[2][3][4]

வகை

காதல்படம் / மசாலாப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

அப்பு (பிரசாந்த்) தமிழ்நாட்டிலிருந்து மும்பைக்கு தனது சகோதரியின் இறப்பிற்குக் காரணமாக இருந்த ஒரு பெண்ணைத் தேடி வருகின்றான். அங்கு இரவும் பகலும் கண்விழித்து பணிபுரியும் அப்பு தன் குறிக்கோளை அடைவதற்காக வாழ்கின்றான். அவனுடன் வாழும் அவனது தோழர்களின் சொல்லையும் பொருட்படுத்தாது இரவு பகல் என்பது பாராது வாகன ஓட்டுனராகப் பணிபுரிகின்றான். ஒரு சமயம் மும்பையில் இருந்த பாலியற் தொழில் நடக்கும் விடுதியில் வண்டிப் பயனரை இறக்கும் சமயம் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக காடையர்கள் அழைத்துச் செல்வதைப் பார்க்கின்றார். பின்னர் அவரைக் காப்பாற்றுவதற்காக தன்னிடம் இருக்கும் பணத்தையெல்லாம் அப்பாலியற் தொழில் விடுதியை நடத்தும் மகாராணியிடம் (பிரகாஷ்ராஜ்) தருகின்றார். வெளியில் அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் அவர் பின்னர் அப்பெண்ணைக் காதலிக்கின்றார். அவரை அங்கிருந்து கடத்திச் செல்லும் அப்பு பின்னாட்களில் மகாராணியே தன் சகோதரியின் மரணத்திற்குக் காரணமானவர் என்பதனைத் தெரிந்து அவரைப் பழிவாங்குகின்றார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:வசந்த் இயக்கிய திரைப்படங்கள்

"https://tamilar.wiki/index.php?title=அப்பு&oldid=30057" இருந்து மீள்விக்கப்பட்டது