அன்புள்ள காதலுக்கு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அன்புள்ள காதலுக்கு
இயக்கம்மோகன்
தயாரிப்புமோகன்
இசைதேவா
நடிப்புமோகன்
மேகா
சங்கீதா
பாவனா
ஒளிப்பதிவுஒய். என். முரளி
படத்தொகுப்புசங்கர்
வெளியீடு17 செப்டம்பர் 1999
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அன்புள்ள காதலுக்கு (Anbulla Kadhalukku) என்பது 1999 ஆம் ஆண்டு வெளியான தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்த மோகன் மேகா, சங்கீதா, பவானா ஆகியோருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் ஆனந்த் பாபு, டெல்லி கணேஷ் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர். இந்த படம் 1999 செப்டம்பரில் வெளியானது. மோசமான விமர்சனத்தை பெற்று, வணிக ரீதியான தோல்வி அடைந்தது.[1][2][3]

நடிகர்கள்

தயாரிப்பு

இதே காலகட்டத்தில் வெளியான பல தமிழ் படங்களான ஜோடி (1999), மின்சார கண்ணா (1999), பூவெல்லாம் கேட்டுப்பார் (1999) போன்ற படங்களைப் போன்று ஒரே கதைக்களத்தை இந்தப் படமும் கொண்டிருந்தது.[4]

இசை

இப்படத்திற்கான இசையை தேவா அமைத்துள்ளார்.[5][6]

எண் பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் நீளம் (நி: நொ)
1 "ஞாபகம் இருக்குதா" பி. உன்னிகிருஷ்ணன், சுஜாதா ஜீவன் 05:05
2 "கல்யாணம்மா கல்யாணம்" முரளி, கிருஷ்ணராஜ் 04:59
3 "கருப்பா இருக்கட்டும்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 05:41
4 "மன்மத மலையே" பி. உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் அறிவுமதி 04:58
5 "ஏய் இளைய நிலவே" எஸ். பி. பாலசுப்பிரமணியம் காவி ரவி 05:50

வெளியீடு

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் படங்களில் நடிக்க திரும்பி வந்த மோகனுக்கு இந்த படம் பெரும் இழப்பை ஏற்படுத்தியது, படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மட்டுமே விரும்பி, ஜெயம் ரவியின் தந்தையாக சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தார்.[7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அன்புள்ள_காதலுக்கு&oldid=30370" இருந்து மீள்விக்கப்பட்டது