சங்கீதா கிரிஷ் (நடிகை)
சங்கீதா கிரிஷ் | |
---|---|
பிறப்பு | சங்கு ராமன் |
வாழ்க்கைத் துணை | கிரிஷ் (பாடகர்) (2009–தற்போதுவரை) |
சங்கீதா கிரிஷ் (பிறப்பு: 21 அக்டோபர் 1978) ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் பின்னணிப்பாடகியும் ஆவார். இவர் 90களின் இடைப்பகுதியில் நடிப்புத்துறையினுள் நுழைந்தார். உயிர், பிதாமகன், தனம் போன்ற திரைப்படங்களில் நடித்தமைக்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எ.ஆர்.ரகுமானுடனும் பணிபுரிந்திருக்கிறார்.
ஆரம்ப வாழ்க்கை
சங்கீதா சென்னையில் பிறந்தவர்.[1] இவரது பெற்றோர் அரவிந்த், பானுமதி. சங்கீதாவின் பாட்டனார் கே. ஆர் பாலன் திரைப்படத் தயாரிப்பாளர், 20க்கு மேற்பட்ட தமிழ்ப்படங்களை தயாரித்திருக்கிறார். இவரின் தந்தையும் பல படங்களை தயாரித்திருக்கிறார்.[2] இவருக்கு இரு சகோதரர்கள் உள்ளனர்.[1] சங்கீதா ஓர் பரதநாட்டியக்கலைஞர். பரதத்தை தனது பள்ளிக்காலத்தில் பயின்றார் [3] இவர் பெசன்ட் நகர் சென் ஜேன்சு பள்ளியில் படித்தார்.
தொழில்
90களின் கடைசியில் நடிப்புத்தொழிலை தொடங்கினார். ஆரம்பத்தில் குறைந்த முதலீட்டு திரைப்படங்களில் நடித்தார், இவர் விக்ரம், சூரியாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருது பெற்றது. மாதவனுடன் இணைந்து எவனோ ஒருவன் திரைப்படத்தில் நடித்தார்.
தொலைக்காட்சியில்
விஜய் தொ.கா நிகழ்ச்சியான ஜோடி நம்பர் 1 இல் நடுவராக இருந்தார். தற்போது சீ தமிழ் தொலைக்காட்சியில் பல நிகழ்வுகளுக்கு நடுவராக இருந்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடன திறமைக்கு முக்கிய பங்கு இவருக்கு உண்டு.
சொந்த வாழ்க்கை
2009 ஆம் ஆண்டு, பிப்ரவரி முதலாம் தேதி அன்று திருவண்ணாமலைக் கோவிலில், தமிழ்ப் பின்னணிப் பாடகரான கிரிஷை சங்கீதா திருமணம் செய்துகொண்டார்.[4] திரைத்துறையினர் திருமணத்திற்கு வந்து தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.[5]
திரைப்படத்துறை
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | அடிக்குறிப்புகள் |
---|---|---|---|---|
1998 | காதலே நிம்மதி | தமிழ் | ||
உதவிக்கு வரலாமா | இசுடெலா | தமிழ் | ||
சமர் இன் பொத்லகெம் | மலையாளம் | |||
பகவத் சிங் | தமிழ் | |||
1999 | தீபாஸ்தம்பாம் மகாஸ்சரியம் | பிரியா | மலையாளம் | |
வழுன்நொர் | ரெபேக்கா | மலையாளம் | ||
கெஸ்ட் ஹவுஸ் | தமிழ் | |||
அசலா சன்தடி | தெலுங்கு | |||
அன்புள்ள காதலுக்கு | தமிழ் | |||
இங்கிலீஸ் மீடியம் | மலையாளம் | |||
2000 | டபுள்ஸ் | சங்கீதா | தமிழ் | |
சரதா | ஜெலிஜா | மலையாளம் | ||
வர்னகழ்சகள் | மலையாளம் | |||
2001 | கபடி கபடி | தமிழ் | ||
நாவ்வுது பிரதகலிரா | தெலுங்கு | |||
மா அயன சுந்தராய்யா | தெலுங்கு | |||
2002 | கத்கம் | சீதாலக்ஷ்மி | தெலுங்கு | வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது (தெலுங்கு). வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான சினிமா விருது |
2003 | பெல்லம் ஓரெல்டெ | சந்தியா | தெலுங்கு | |
ஈ அப்பாயி சாலா மன்சூடு | ஜீவிதா | தெலுங்கு | ||
ஆயுதம் (திரைப்படம்) | கல்யாணி | தெலுங்கு | ||
ஓரெ நீ பிரேமா பங்காரம் கானு | சங்கீதா | தெலுங்கு | ||
பிதாமகன் | கோமதி | தமிழ் | வெற்றியாளர், பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருது. (தமிழ்) வெற்றியாளர், சிறந்த துணை நடிகைக்கான தமிழ் நாடு மாநில திரைப்பட விருது | |
நேனு பெல்லிகி ரெடி | பிரியா | தெலுங்கு | ||
டைகர் அரிச்சந்திரன் பிரசாத் | சுவாதி | தெலுங்கு | ||
2004 | மா இன்டிகொஸ்டெ எம் டெஸ்தாரு-மீ இன்டிகொஸ்டெ எம் ஸ்தாரு | ஹாரிகா மாதவ் | தெலுங்கு | |
குஷி குஷிகா | சத்யபாமா | தெலுங்கு | ||
நல்ல | பிரீத்தி | கன்னடம் | ||
விஜயேந்திர வர்மா | தெலுங்கு | சிறப்புத் தோற்றம் | ||
2005 | சங்கராந்தி | தெலுங்கு | ||
நா ஓபிரி | கோவரி வேணு | தெலுங்கு | ||
அடிரின்டய்யா சந்ட்ரம் | பத்மவதி (பட்டு) | தெலுங்கு | ||
2006 | உயிர் (திரைப்படம்) | அருந்ததி சத்யா | தமிழ் | |
காசு | பிரார்த்தனா | தமிழ் | ||
47ஏ பெசன்ட் நகர் வரை | தமிழ் | |||
2007 | பானுமதி | பானுமதி வெங்கட்ரமணா | தெலுங்கு | |
எவனோ ஒருவன் | வத்சலா வாசுதேவன் | தமிழ் | ||
2008 | காளை | லட்சுமி | தமிழ் | |
மா அயன சந்தி பில்லாடு | சிந்தாமணி | தெலுங்கு | ||
நேபாளி | தமிழ் | |||
மேஜிக் லேம்ப் | அல்போன்சா | மலையாளம் | ||
நாயகன் | மரு. சந்தியா விசுவநாத் | தமிழ் | ||
தனம் | தனம் அனந்தராமன் | தமிழ் | ||
2009 | நான் அவனில்லை 2 | மஹாலக்ஷ்மி | தமிழ் | |
மத்திய சென்னை | தமிழ் | |||
2010 | சிறீமதி கல்யாணம் | சுவேதா / சீதா | தெலுங்கு | |
குட்டி பிசாசு | காயத்ரி | தமிழ் | ||
மன்மதன் அம்பு | தீபா | தமிழ் | ||
தம்பிக்கோட்டை | பீடா பாண்டியம்மா | தமிழ் | ||
2011 | புத்திரன் | தமிழ் | ||
துர்கா | தெலுங்கு | |||
உச்சிதனை முகர்ந்தால் | நடேசனின் மனைவி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 http://www.totaltollywood.com/interviews/Sangeetha_2057.html
- ↑ "AllIndianSite.com Tollywood - It's All About Sangeetha". Tollywood.allindiansite.com இம் மூலத்தில் இருந்து 2012-07-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120726013257/http://tollywood.allindiansite.com/interviews/sangeetha.html. பார்த்த நாள்: 2012-08-05.
- ↑ "Tamil Nadu / Chennai News : Actor Sangeetha content with her success". The Hindu. 2006-08-03 இம் மூலத்தில் இருந்து 2007-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070707164008/http://www.hindu.com/2006/08/03/stories/2006080316560200.htm. பார்த்த நாள்: 2012-08-05.
- ↑ "Actress Sangeeta weds singer Krish - Telugu cinema marriage". Idlebrain.com. http://www.idlebrain.com/news/functions/wedding-sangeeta.html. பார்த்த நாள்: 2012-08-05.
- ↑ "Events - Numerous Stars At Sangeetha – Krish Wedding". IndiaGlitz. 2009-02-01 இம் மூலத்தில் இருந்து 2009-02-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090203155111/http://www.indiaglitz.com/channels/tamil/gallery/events/17392.html. பார்த்த நாள்: 2012-08-05.
வெளியிணைப்புகள்
- வாழும் நபர்கள்
- 1978 பிறப்புகள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- கன்னடத் திரைப்பட நடிகைகள்
- மலையாளத் திரைப்பட நடிகைகள்
- தமிழ்த் திரைப்பட நடிகைகள்
- இந்தியத் திரைப்பட நடிகைகள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- சென்னை நடிகைகள்
- சென்னை வடிவழகிகள்
- தெலுங்குத் திரைப்பட நடிகைகள்
- தமிழ்த் தொலைக்காட்சி நடிகைகள்
- தமிழ்த் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள்
- தமிழ்நாட்டு தொலைக்காட்சி பிரமுகர்கள்