ஆனந்த் பாபு
Jump to navigation
Jump to search
ஆனந்த் பாபு | |
---|---|
பிறப்பு | ஆகத்து 30, 1963 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1983-1999; 2009- தற்போது வரை |
பெற்றோர் | நாகேஷ் ரெஜினா |
வாழ்க்கைத் துணை | சாந்தி (1985-2013) (மணமுறிவு) [1] |
பிள்ளைகள் | ஜோஸ்யா (பி.1987) கஜேஸ் (பி.1991) ஜான் (பி. 1997) ரெஜினா மேரி (பி. 2003) |
ஆனந்த் பாபு (பிறப்பு: 30 ஆகத்து 1963) ஒரு இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார்.[2] இவர் நன்கறியப்பட்ட தமிழ் நடிகர் நாகேஷின் மகனாவார். இவரது நன்றாக நடனமாடும் திறனுக்காகவும் அறியப்படுகிறார். இவர் 1983 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் பல திரைப்படங்களில் முன்னணி நடிகராக நடித்தவர். 2009ஆம் ஆண்டு முதல் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆனந்த் பாபு 1985 திசம்பர் 8 அன்று சாந்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இவரது இளைய மகனான கஜேஷ் தற்போது தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார். போதைப் பழக்கத்திற்கு ஆளானதால் 2006 ஆவது ஆண்டில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[3]
நடித்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | மொழி | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1983 | தங்கைக்கோர் கீதம் | தமிழ் | ||
1984 | கடமை | தமிழ் | ||
1984 | புயல் கடந்த பூமி | தமிழ் | ||
1984 | நியாயம் கேட்கிறேன் | தமிழ் | ||
1985 | பாடும் வானம்பாடி | தமிழ் | பாபு | |
1985 | வெற்றிக்கனி | தமிழ் | ||
1985 | உதயகீதம் | தமிழ் | ஆனந்த் | |
1985 | பார்த்த ஞாபகம் இல்லையோ | தமிழ் | ||
1985 | விஸ்வநாதன் வேலை வேண்டும் | தமிழ் | ||
1985 | இளமை | தமிழ் | ||
1985 | பந்தம் | தமிழ் | ||
1985 | அர்த்தமுள்ள ஆசைகள் | தமிழ் | ||
1986 | மௌனம் கலைகிறது | தமிழ் | ||
1986 | பலேமித்ருடு | தெலுங்கு | ||
1988 | கடற்கரை தாகம் | தமிழ் | ||
1989 | தாயா தாரமா | தமிழ் | ||
1990 | புரியாத புதிர் | தமிழ் | பாபு | |
1990 | புது வசந்தம் | தமிழ் | மைக்கேல் | |
1990 | எங்கள் சுவாமி அய்யப்பன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
1990 | எதிர்காற்று | தமிழ் | ஜனா (ஜனார்த்தன்) | |
1990 | புதுப்புது ராகங்கள் | தமிழ் | ||
1991 | சிகரம் | தமிழ் | கிருஷ்ணா | |
1991 | சேரன் பாண்டியன் | தமிழ் | சந்திரன் | |
1991 | இதய ஊஞ்சல் | தமிழ் | ||
1991 | எம்ஜிஆர் நகரில் | தமிழ் | ||
1991 | புத்தம் புது பயணம் | தமிழ் | பாபு | |
1991 | அன்பு சங்கிலி | தமிழ் | ||
1991 | ஈஸ்வரி | தமிழ் | ||
1991 | ஒன்னும் தெரியாத பாப்பா | தமிழ் | ||
1991 | தாயம்மா | தமிழ் | ||
1991 | மாமஸ்ரீ | தெலுங்கு | ||
1991 | இல்லு இல்லளு பிள்ளலு | தெலுங்கு | ||
1992 | வானமே எல்லை | தமிழ் | தீபக் | |
1992 | ரெண்டு பொண்டாட்டி காவல்காரன் | தமிழ் | கிருஷ்ணன், ஆனந்த் | |
1992 | காவலுக்கு கண்ணில்லை | தமிழ் | ||
1992 | செவிலியர் மிகயல் | மலையாளம் | பிரெத்தி | |
1993 | நான் பேச நினைப்பதெல்லாம் | தமிழ் | விஸ்வநாத் | |
1993 | சூரியன் சந்திரன் | தமிழ் | ||
1993 | என் இதய ராணி | தமிழ் | ||
1993 | மா வறிகி பெல்லி | தெலுங்கு | ||
1994 | மணிரத்னம் | தமிழ் | ||
1994 | பட்டுக்கோட்டை பெரியப்பா | தமிழ் | ||
1994 | வாட்ச்மேன் வடிவேலு | தமிழ் | ||
1994 | கிஷ்கிந்தா கந்தா | தெலுங்கு | ||
1995 | பதிலி | தெலுங்கு | ||
1996 | லத்தி சார்ஜ் | தெலுங்கு | ||
1996 | மெருப்பு | தெலுங்கு | ||
1996 | வீட்டுக்குள்ளே | |||
1997 | ரோஜா மலரே | தமிழ் | அன்பு | |
1998 | சந்தோசம் | தமிழ் | கார்த்திக் | |
1998 | சேரன் சோழன் பாண்டியன் | தமிழ் | சோழன் | |
1999 | அன்புள்ள காதலுக்கு | தமிழ் | ||
2009 | ஆதவன் | தமிழ் | தரணி | |
2009 | மதுரை சம்பவம் | தமிழ் | ||
2009 | ஒளியும் ஒலியும் | தமிழ் | ||
2012 | ஏதோ செய்தாய் என்னை | தமிழ் | வீரு | |
2014 | 1 நினொக்கதினே | தெலுங்கு | சந்திரசேகர் |
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141121004023/http://www.newchennai.com/index.php/anand-babus-wife-seeks-divorce/.
- ↑ "நடன நடிகர்... நாகேஷ் மைந்தன் ஆனந்த்பாபு - இன்று ஆனந்த்பாபு பிறந்தநாள்". இந்து தமிழ். 30 ஆகஸ்ட் 2020. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/572472-anandbabu-birthday.html.
- ↑ http://www.behindwoods.com/tamil-movie-news/june-06-02/15-06-06-anand-babu.html