உனக்காக பிறந்தேன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உனக்காக பிறந்தேன்
இயக்கம்பாலு ஆனந்த்
தயாரிப்புதிருப்பூர் மணி
கதைபாலு ஆனந்த்
இசைதேவா
நடிப்பு
ஒளிப்பதிவுஜெயனன் வின்சென்ட்
படத்தொகுப்புஎம். என். இராஜா
விநியோகம்விவேகானந்தா பிக்சர்ஸ்
வெளியீடுமே 15, 1992 (1992-05-15)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உனக்காக பிறந்தேன் (Unakkaga Piranthen) என்பது 1992 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் காதல் நாடகத் திரைப்படம் ஆகும். பாலு ஆனந்த் எழுதி இயக்கிய இப்படத்தில் பிரசாந்த் மற்றும் மோகினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்ததனர். படத்திற்கான இசையை இசையமைத்தவர் தேவா மேற்கொள்ள, ஒளிப்பதிவை ஜெயனன் வின்சென்ட் கையாண்டனர். இதை விவேகானந்த பிக்சர்ஸ் பதாகையின் கீழ் திருப்பூர் மணி தயாரித்து விநியோகித்தார்.

கதை

மாலினி ( மோகினி ), இலங்கை அகதி. இவள் இந்தியாவில் அகதிகள் முகாமில் தஞ்சம் புகுந்துள்ளார் . ஒரு முகாம் காவலர் அவளைத் துன்புறுத்த முயற்சிக்கும்போது, ராஜா ( பிரசாந்த் ) என்ற உள்ளூர் இளைஞன் அவளை மீட்க வருகிறான். அதன்பிறகு அவர்கள் அடிக்கடி சந்திக்கத் தொடங்குகிறார்கள், விரைவில் காதலிக்கிறார்கள். அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப வரும் உத்தரவினால், மாலினி இலங்கை செல்கிறாள். பிரிவினை தாங்க முடியாமல், ராஜா இலங்கைக்கு நீந்தி செல்ல முடிவு செய்கிறான். ஆனால் கரையை அடைந்ததும் அவன் ஒரு பயங்கரவாதி என்று நினைக்கும் கடலோர காவலர்களால் கைது செய்யப்படுகிறான். ராஜா சிறையிலிருந்து தப்பித்து மாலினியைக் கண்டுபிடிக்கிறான்.

நடிகர்கள்

இசை

படத்திற்கான பின்னணி இசை, பாடல் போன்றவற்றிற்கு திரைப்பட இசையமைப்பாளர் தேவா இசையமைத்தார்.

தமிழ்ப் பதிப்பு

படத்தின் பாடல்பதிவு 1992 இல் வெளியிடப்பட்டது. இதில் ஐந்து பாடல்கள் இருந்தன. பாடல் வரிகளை வாலி, காமகோடியன் ஆகியோர் எழுதினர்.[1]

எண் பாடல் பாடகர்(கள்) பாடல் வரிகள் காலம்
1 "மாமா மாமா உன்னை" சுவர்ணலதா, மனோ காமகோடியன் 4:50
2 "ஓ கிருஷ்ணா (இருவர்)" எஸ். ஜானகி, எஸ். பி. பாலசுப்பிரமணியம் வாலி 4:41
3 "ஓ கிருஷ்ணா (பெண்)" எஸ். ஜானகி 4:48
4 "படிக்கிற வயசுல" எஸ். பி. பாலசுப்ரமண்யம் காமகோடியன் 4:55
5 "பெண் வேணும்" எஸ். பி. பாலசுப்பிரமண்யம், சுனந்தா 4:05

தெலுங்கு பதிப்பு

இந்த படம் தெலுங்கில் பிரேம பூஜாரி என்று பெயரிடல் மொழிமாற்றம் செயபட்டது.[2] அனைத்து பாடல்களையும் ராஜரிசி எழுதினார்.[3]

ட்ராக் பாடல் பாடகர் (கள்) காலம்
1 "ஓ ராதா ஓ ராதா" எஸ்.பி.பாலசுப்ரமண்யம் 4:47
2 "இடி நா ஆசயம்" எஸ்.பி.பாலசுப்ரமண்யம் 4:44
3 "ஓ கிருஷ்ணா ஓ கிருஷ்ணா" கே.எஸ் சித்ரா 4:55
4 "மந்தரம் முத்த மந்தரம்" எஸ்.பி.பாலசுப்பிரமண்யம், கே.எஸ் சித்ரா 4:10
5 "மாவா மாவா" எஸ்.பி.பாலசுப்பிரமண்யம், கே.எஸ் சித்ரா 4:52

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உனக்காக_பிறந்தேன்&oldid=31141" இருந்து மீள்விக்கப்பட்டது