திருக்கொட்டாரம் ஐராவதீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
கோட்டாறு ஐராவதீசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):கோட்டாறு,திருக்கொட்டாரம்
பெயர்:கோட்டாறு ஐராவதீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கொட்டாரம்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐராவதீசுவரர்
தாயார்:சுகந்த குந்தளாம்பிகை, வண்டமர் பூங்குழலி
தல விருட்சம்:பாரிஜாதம்
தீர்த்தம்:சூரிய தீர்த்தம், வாஞ்சியாறு
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

திருக்கொட்டாரம் ஐராவதீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 53ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. காரைக்காலில் இருந்து திருநள்ளாறு, நெடுங்காடு வழியாக கும்பகோணம் செல்லும் சாலையில் நெடுங்காடு தாண்டியபிறகு வரும் திருக்கொட்டாரம் கூட்டு சாலை என்ற பிரிவிலிருந்து சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கொல்லுமாங்குடியிலிருந்து நெடுங்காடு வழியாக திருநள்ளாறு செல்லும் மயிலாடுதுறை-காரைக்கால், கும்பகோணம்-காரைக்கால் பேரந்துகளில் சென்று வேலங்குடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சுமார்1 கிமீ சென்று இவ்வூரை அடையலாம்.பேரளம்-காரைக்கால் பேருந்தில் ஏறி அம்கரத்தூரில் இறங்கி வடக்கே 1.5 கிமீ சென்றும் இவ்வூரை அடையலாம். இத்தலத்தில் வெள்ளை யானை வழிபட்டது என்பது தொன்நம்பிக்கை.

அமைப்பு

ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கொடி மரம் உள்ளது. கொடிமரத்தின்கீழ் கொடி மர விநாயகர் உள்ளார். அடுத்துள்ள மண்டபத்தில் பலி பீடமும் நந்தியும் உள்ளன. அடுத்துள்ள மூலவர் கருவறைக்கு முன்பாக மற்றொரு பலிபீடமும் நந்தியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், சம்பந்தர், அப்பர், நாகர், சுந்தரர், பரவை நாச்சியார், கைலாசநாதர், அகஸ்தீஸ்வரர், சுபகமகரிஷி, பைரவர், நவக்கிரகம், சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். கோயிலின் இடது புறம் வண்டமர் பூங்குழலி அம்மன் சன்னதியும், குமார புவனேசுவரர் சன்னதியும் உள்ளது. குமார புனேசுவரர் சன்னதியின் மூலவராக லிங்கத்திருமேனி உள்ளது.

சிறப்பு

சுபமகிரிஷி என்பவர் நாள்தோறும் மூலவரை தரிசித்து வந்ததாகவும், ஒரு நாள் அவர் வருவதற்கு நேரமானதால் கதவு சாத்தப்பட்டதாகவும், அதைக் கண்ட மகரிஷி தேனி வடிவம் கொண்டு உள்ளே பெருமானை வழிபட்டதாகவும் கூறுகின்றனர். அப்போது முதல் அவர் அங்கேயே தங்கிவிட்டதாகவும் கூறுகின்றனர். அது முதல் மூலவர் சன்னதியில் தேன் கூடு இருந்ததாகவும் தற்போது அந்த தேன்கூடு இல்லை என்றும் கூறினர். முன்பு தேன் கூடு இருந்ததை சிறப்பாகக் கூறுகின்றனர்.தல மரம் பாரிஜாதம், தீர்த்தம் சூரிய தீர்த்தம் மற்றும் வாஞ்சியாறு ஆகும்.

இறைவன், இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் ஐராவதீசுவரர்,இறைவி சுகந்த குந்தளாம்பிகை.

வழிபட்டோர்

வெள்ளை யானை, குமார புவனேசுவரர், அகத்தியர் முதலானோர்.

குடமுழுக்கு

1937, 1987, 2009 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெற்றது.

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

தினமலர் கோயில்கள் தளம்

படத்தொகுப்பு