சேகர் (நடிகர்)
சேகர் | |
---|---|
பிறப்பு | ஜே. வி. சேகர் 7 சனவரி 1963 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இறப்பு | 8 சூலை 2003 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 40)
தேசியம் | இந்தியன் |
மற்ற பெயர்கள் | மாஸ்டர் சேகர் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1968–1988 |
மாஸ்டர் சேகர் என்று அறியப்படும் ஜே. வி. சேகர் (7 சனவரி 1963 - 8 யூலை 2003) என்பவர் ஒரு இந்திய குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார்.
துவக்க வாழ்க்கையும் தொழிலும்
சேகர் 7, சனவரி, 1963 அன்று பிறந்தார். இவர் நான்கு மொழிகளில் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1968 ஆம் ஆண்டு குடியிருந்த கோயில் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தமிழ்த் திரையிலகில் அறிமுகமானார். [1] மணிப்பயல், ஓ மஞ்சு உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார். இவர் பல திரைப்படங்களில் தனது குழந்தை நடிப்பிற்காக பிரபலமானார். இவர் மாஸ்டர் சேகர் என்று அழைக்கப்பட்டார். இதய வீணை, குடியிருந்த கோயில் உள்ளிட்ட படங்களில் எம்.ஜி.ஆரின் குழந்தைப் பருவ வேடங்களில் நடித்தார். இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் ஒளிப்பதிவாளர் ஜே. வி. விஜயத்தின் மகன் ஆவர். [1]
இவர் 2003 சூலை 8 அன்று சென்னையில் தனது வீட்டின் முதல் மாடியில் இருந்து விழுந்து இறந்தார். [2] [3]
பகுதி படத்தொகுப்பு
ஆண்டு | படம் | மொழி | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1968 | குடியிருந்த கோயில் | தமிழ் | சேகர் (ம) ஆனந்த் | |
1968 | எங்க ஊர் ராஜா | தமிழ் | இளம் சக்கரவர்த்தி | |
1968 | ஒளி விளக்கு | தமிழ் | ||
1968 | சக்கரம் | தமிழ் | ||
1969 | வா ராஜா வா | தமிழ் | ||
1970 | அனாதை ஆனந்தன் | தமிழ் | ஆனந்தன் | |
1970 | வைராக்கியம் | தமிழ் | ||
1970 | எங்க மாமா | தமிழ் | காந்தி | |
1970 | என் அண்ணன் | தமிழ் | ரெங்கா | |
1970 | நம்ம குழந்தைகள் | தமிழ் | ||
1971 | அன்னை வேளாங்கண்ணி | தமிழ் | ராசா | |
1971 | போபானும் மொளியும் | மலையாளம் | போபன் | |
1971 | அபிஜாத்யம் | மலையாளம் | ||
1972 | ஆசீர்வாதம் | தமிழ் | ||
1972 | மயிலாடும்குன்னு | மலையாளம் | ||
1972 | தங்கதுரை | தமிழ் | ||
1972 | ராஜா | தமிழ் | இளம் ராஜா | |
1972 | அக்கா தம்முடு | தெலுங்கு | ||
1972 | அகத்தியர் | தமிழ் | ||
1972 | மீண்டும் வாழ்வேன் | தமிழ் | பாபு | |
1972 | அன்னமிட்ட கை | தமிழ் | துரைராஜ் | |
1972 | இதய வீணை | தமிழ் | சுந்தரம் | |
1973 | கட்டிலா தொட்டிலா | தமிழ் | கோபி | |
1973 | சொல்லத்தான் நினைக்கிறேன் | தமிழ் | கமலின் தம்பி | |
1973 | ராஜ ராஜ சோழன் | தமிழ் | பொன்னா | |
1973 | திருமலை தெய்வம் | தமிழ் | வெங்கடேசன் | |
1974 | வாணி ராணி | தமிழ் | ||
1974 | எங்கம்மா சபதம் | தமிழ் | ||
1974 | மணிப்பயல் | தமிழ் | இளங்கோவன் | |
1975 | மஞ்சள் முகமே வருக | தமிழ் | ||
1975 | சுவாமி ஐயப்பன் | மலையாளம்/தமிழ் | ஐயப்பன் | |
1975 | முன்னிரவு நேரம் | தமிழ் | ||
1975 | ஓடக்குழல் | மலையாளம் | ||
1975 | ஜானகி சபதம் | தமிழ் | ||
1976 | ஓ மஞ்சு | தமிழ் | Madhu | |
1976 | பயணம் | தமிழ் | சேகர் | |
1976 | Cசோட்டாணிக்கரை அம்மா | மலையாளம் | ||
1976 | குமார விஜயம் | தமிழ் | ||
1976 | மோகினியாட்டம் | மலையாளம் | சிந்து | |
1976 | பேரும் புகழும் | தமிழ் | இரவி | |
1976 | அம்பா அம்பிகா அம்பாலிகா | மலையாளம் | முருகன் | |
1976 | ஆயிரம் ஜன்மங்கள் | மலையாளம் | இராஜன் | |
1976 | தசாவதாரம் | தமிழ் | பரதன் | |
1977 | சமுத்திரம் | மலையாளம் | ||
1978 | பீனா | மலையாளம் | ||
1979 | கவரிமான் | தமிழ் | இராஜேஷ் | |
1979 | நல்லதொரு குடும்பம் | தமிழ் | ||
1979 | ஒரு விடுகதை ஒரு தொடர்கதை | தமிழ் | ||
1979 | நீதியா நியாயமா | தமிழ் | ||
1979 | அன்பின் அலைகள் | தமிழ் | ||
1979 | நங்கூரம் | தமிழ் | ||
1980 | நதியை தேடி வந்த கடல் | தமிழ் | ||
1982 | துணைவி | தமிழ் | ||
1988 | ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் | தமிழ் | ||
1993 | அபர்ணா | மலையாளம் |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "திரைத் துளி". tamil.filmibeat.com. http://tamil.filmibeat.com/news/actor1.html. பார்த்த நாள்: 10 February 2015.
- ↑ "షాకింగ్ న్యూస్.. శేఖర్ మాస్టర్ని చంపేసిన గూగుల్" (in te). 2021-07-21. https://www.sakshi.com/telugu-news/movies/sekhar-master-died-google-shows-sekhar-master-death-date-1380763.
- ↑ "Master Sekhar falls to death". 2003-07-09. http://www.thehindu.com/thehindu/2003/07/09/stories/2003070908680300.htm.
வெளி இணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சேகர்
- "Complete List of Master Sekhar". spicyonion.com. http://spicyonion.com/actor/master-sekar-movies-list/. பார்த்த நாள்: 10 February 2015.