அனாதை ஆனந்தன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அனாதை ஆனந்தன்
சுவரிதழ்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புசங்கரன் ஆறுமுகம்
முத்துவேல் பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
ஜெயலலிதா
வெளியீடுசெப்டம்பர் 4, 1970
ஓட்டம்.
நீளம்4504 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அனாதை ஆனந்தன் என்பது 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தை முத்துவேல் மூவிஸ் தயாரித்தது.[1] இப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், ஜெயலலிதா, முத்துராமன், ஆர். எஸ். மனோகர், அஞ்சலிதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் 1969 இல் வெளியான சந்தா அவுர் பிஜிலி என்ற இந்த படத்தின் மறு ஆக்கம் ஆகும். இந்தப் படம் 1972ல் தெலுங்கில் அக்கா தம்முடு என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.

கதை

பணக்கார் ஒருவரின் பேரனான ஆனந்தன் அனாதை விடுதியில் வசிக்கவேண்டிய நிலைக்கு ஆளாகிறான். அங்கே நடக்கும் கொடுமைகளைக் கண்டு தப்பித்து நகரத்துக்கு வருகிறான். அங்கு சிறுவர்களை திருட்டுத் தொழிலுக்கு பயன்படுத்தும் இரத்தினம் என்பவரிடன் சிக்குகிறான். அங்கு நடனக்காரியான மோகினியின் அன்பு அவனுக்கு கிடைக்கிறது. மோகினியின் காதலன் சேகரும் இரத்தினமும் சேர்ந்து ஆனந்தனைப் பயன்படுத்தி ஆனந்தனின் தாத்தா வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிடுகின்றனர். இறுதியில் என்ன ஆகிறது என்பதே கதை.

நடிப்பு

தயாரிப்பு

இப்படத் தயாரிப்பு குறித்து வி. சி. குகநாதன் குறிப்பிடுகையில் பம்பாயில் இருந்த ஏ. வி. மெய்யப்பன் ஆலிவுட் திரைப்படம் ஒன்றைப் பார்க்க தன்னையும், மாதவனையும் பம்பாய்க்கு வருமாறு அழைத்தார். ஆனால் தாங்கள் பம்பாய் வருவதற்குள் மெய்யப்பன் சென்னை திரும்பிவிட்டார். ஆனால் இருவரும் அந்தப் படத்தைப் பார்த்தனர். பின்னர் அந்த ஆலிவுட் திரைப்படத்தின் பாதிப்பில் இருந்து இந்தியில் எடுக்கபட்ட சந்தா அவுர் பிஜிலி என்ற படத்தையும் பார்க்குமாறு தொலைபேசியில் அறிவுறுத்தினார். அதனால் அதையும் பார்த்தனர். மெய்யப்பன் தான் சந்தா அவுர் பிஜிலி படத்தை தமிழில் மறு ஆக்கம் செய்ய விரும்புவதாக கூறினார். அதற்கு இருவரும் ஆலிவுட் படத்தில் புதுமை உள்ளது ஆனால் அந்த இந்திப் படத்தை மறு ஆக்கம் செய்யவேண்டாம் என்று கூறினர். ஆனால் மெய்யப்பன் அப்படத்தை எடுப்பதில் உறுதியாக இருந்தார். பிறகு மாதவன் அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். வி. சி. குகநாதன் படத்திற்கு உரையாடல் எழுதினார். படம் வெளியான முதல் நாளன்று திரையரங்கில் நல்ல கூட்டம் இருந்தது. அதைப்பார்த்த மெய்யப்பன் குகனாதனிடம் படம் நன்றாக வராது என்று கூறினாய் கூட்டத்தை பார்த்தாயா என்றார். ஆனால் இரண்டு வாரங்கள் கழித்து அந்தப் படம் சரியாக போகாது என்று எப்படி கூறினாய் என்று கேட்டார்.[2]

பாடல்

இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.[3]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"அழைத்தவர் குரலுக்கு" சீர்காழி கோவிந்தராஜன் 04:05
"உலகம் பொல்லாத" பி. சுசீலா 03:54
"நனைந்தால் நனையட்டுமே" பி. சுசீலா 04:04
"சும்மா இருங்களே கொஞ்சம்" டி. எம். சௌந்தரராஜன், P. Susheela 01:55
"ஜம்முன்னு வந்திங்கோ" பி. சுசீலா 04:16
"இங்கு பார்ப்பதை" எல். ஆர். ஈசுவரி 04:10
"கண்ணாடி முன்னாடி தள்ளாடி" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:06

வெளியீடு

அனதை ஆனந்தன் 1970 செப்டம்பர் 4 அன்று வெளியானது.[4][5] வணிக எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.[2]

மேற்கோள்கள்

வார்ப்புரு:ஏவிஎம்

"https://tamilar.wiki/index.php?title=அனாதை_ஆனந்தன்&oldid=30427" இருந்து மீள்விக்கப்பட்டது