திலகம் (1960 திரைப்படம்)
திலகம் | |
---|---|
திலகம் (1960) திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | எம். சரவணன் |
மூலக்கதை | கே. எம். நாராயணசுவாமியின் படைத்தவர் திலகம் மேடை நாடகம் |
இசை | ஆர். சுதர்சனம் |
நடிப்பு | பிரேம் நசீர் எம். என். ராஜம் தாம்பரம் லலிதா ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் |
ஒளிப்பதிவு | எஸ். மாருதி ராவ் |
படத்தொகுப்பு | பஞ்சாபி (இயக்குநர் பஞ்சு) |
கலையகம் | ஏவிஎம் |
வெளியீடு | நவம்பர் 10, 1960(இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திலகம் ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இரட்டையர்கள் இயக்கத்தில் 1960-ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் பிரேம் நசீர், எம். என். ராஜம், ஸ்ரீரஞ்சனி முக்கிய பாத்திரங்களேற்று நடித்தனர்.[1]
திரைக்கதை
சரஸ்வதி கணவனிடமிருந்து பிரிந்து வாழ்கிறாள். அவளும் அவளது மகள் திலகமும் திருச்சியில் வாழும் சரஸ்வதியின் சகோதரி வீட்டிற்கு வந்து தங்குகின்றனர். திலகத்தைத் தன் தம்பி சேகருக்கு மணமுடிக்க சரஸ்வதி விரும்புகிறாள். ஆனால் அவளது சித்தப்பா சாம்பசிவம் திலகத்தை பம்பாயிலுள்ள ஒரு பணக்கார கிழவருக்கு கல்யாணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். சாம்பசிவத்தின் மகன் குணசேகரன் தந்தையின் திட்டத்தை எதிர்ப்பதுடன் திலகத்தை சேகருக்கு திருமணம் செய்து வைக்க நடவடிக்கை எடுக்கிறான். அவனது நடவடிக்கைகளை விளக்குவதே மீதிக் கதையாகும்.[2]
நடிகர்கள்
பிரேம் நசீர்
எம். என். ராஜம்
ஸ்ரீரஞ்சனி
ஆர். இராஜகுமாரி
டி. பாலசுப்பிரமணியம்
தாம்பரம் லலிதா
குலதெய்வம் ராஜகோபால்
எஸ். இராமராவ்
சி. எஸ். பாண்டியன்
எஸ். எல். நாராயணன்
மனோரமா
அப்பா கே. துரைசுவாமி
திலகம் கே. எம். நாராயணசுவாமி
சீதாலட்சுமி
ரமாமணி பாய்
பக்கிரிசாமி [2]
தயாரிப்பு விபரம்
ஏவிஎம் அதிபர் அவிச்சி மெய்யப்பச் செட்டியாரின் மகன் எம். சரவணன் இந்தப் படத்தில் தான் தயாரிப்பாளராக உருவானார்.[2]
பாடல்கள்
திலகம் படத்துக்கு இசையமைத்தவர் ஆர். சுதர்சனம். பாடல்களை யாத்தவர்கள்: கொத்தமங்கலம் சுப்பு, எம். கே. ஆத்மநாதன், கவி எஸ். ராஜகோபால், வி. சீதாராமன் ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எஸ். பகவதி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர்.
எண் | பாடல் | பாடகர்/கள் | பாடலாசிரியர் | கால அளவு |
---|---|---|---|---|
1 | பி ஓ வை போய் | எஸ். சி. கிருஷ்ணன் & சூலமங்கலம் ராஜலட்சுமி | 03:52 | |
2 | மனசுக்குள்ளே மறைச்சுவைக்க முடியலே | சீர்காழி கோவிந்தராஜன் & எம். எல். வசந்தகுமாரி | எம். கே. ஆத்மநாதன் | 03:43 |
3 | ஆடிவரும் பூங்கொடி | பி. சுசீலா | ஏ. மருதகாசி | 03:47 |
4 | ஏழைக்கும் வாழ்வுக்கும் வெகுதூரமா | சீர்காழி கோவிந்தராஜன், எம். எல். வசந்தகுமாரி டி. எஸ். பகவதி |
கவி ராஜகோபால் | 04:38 |
5 | காவேரி கரைதனிலே காவல் இருப்பவளே | டி. எம். சௌந்தரராஜன் | 01:25 | |
6 | ஆயி மகமாயி பேரைச் சொல்லி | எஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈஸ்வரி & சூலமங்கலம் ராஜலட்சுமி | 01:02 | |
7 | கரகம் கரகம் கரகம் | எஸ். சி. கிருஷ்ணன் & சூலமங்கலம் ராஜலட்சுமி | 01:34 | |
8 | மாரி முத்துமாரி | டி. எம். சௌந்தரராஜன் & சூலமங்கலம் ராஜலட்சுமி | கொத்தமங்கலம் சுப்பு | 01:17 |
9 | இந்நேரம் என்ன செய்தே | எஸ். சி. கிருஷ்ணன் & எல். ஆர். ஈஸ்வரி | 01:38 | |
10 | பயாஸ்கோப்பு பாத்தியா | டி. எம். சௌந்தரராஜன் & சூலமங்கலம் ராஜலட்சுமி | கொத்தமங்கலம் சுப்பு | 01:46 |
11 | தஞ்சாவூர் கரகமடி ஓ மாரியம்மா | எஸ். சி. கிருஷ்ணன், சூலமங்கலம் ராஜலட்சுமி, எல். ஆர். ஈஸ்வரி & டி. எம். சௌந்தரராஜன் |
கொத்தமங்கலம் சுப்பு | 01:22 |
12 | காத்திருந்த கண்ணுக்கு ஒளி வந்தது | எம். எல். வசந்தகுமாரி | கவி ராஜகோபால் | 04:22 |
13 | சந்தேகம் என்னும் ஒரு சரக்கு | எஸ். சி. கிருஷ்ணன் & சூலமங்கலம் ராஜலட்சுமி | 03:26 |
மேற்கோள்கள்
- ↑ "AVM Movies". Archived from the original on 2017-03-16. பார்க்கப்பட்ட நாள் 2016-10-09.
- ↑ 2.0 2.1 2.2 ராண்டார் கை (1 நவம்பர் 2014). "Thilakam 1959". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 09 அக்டோபர் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)