புதையல் (1957 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புதையல்
புதையல் 1956 விளம்பரம்
இயக்கம்கிருஷ்ணன்-பஞ்சு
தயாரிப்புகமல் பிரதர்ஸ்
கதைமு. கருணாநிதி
இசைவிஸ்வநாதன்-ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
பத்மினி
எம். கே. ராதா
டி. எஸ். பாலையா
சந்திரபாபு
எம். என். ராஜம்
ஒளிப்பதிவுஜி. விட்டல் ராஜூ
படத்தொகுப்புஎஸ். பஞ்சாபி
கலையகம்கமல் பிரதர்ஸ் லிமிடட்
விநியோகம்கமல் பிரதர்ஸ் லிமிடட்
வெளியீடு10 மே 1957
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதையல் (Pudhaiyal) 1957-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய[1] இப்படத்தை கிருஷ்ணன்-பஞ்சு இயக்கியிருந்தார். இதில் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 10 மே 1957 ல் இப்படம் வெளிவந்தது.[2] [3] இப்படம் வசூல் ரீதியாக வெற்றியடையவில்லை.

திரைக்கதை

புதையல் வெள்ளையம்பலம் (டி. எஸ். பாலையா) ஒரு கிணற்றில் புதைக்கப்பட்ட கற்பனைத் தங்கத்தை அடைய விரும்பியதைப் பற்றிய கதை ஆகும். பத்மினியும் சிவாஜியும் இலங்கையில் உள்ள அவரது தந்தை (எம். கே. ராதா) தனது தாயின் கொலையில் எப்படி சம்பந்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதைப் பற்றிப் பேசுகிறார்கள். பத்மினியும் அவளுடைய சகோதரி தங்கமும் இந்தியாவுக்கு வருகிறார்கள், அங்கு சகோதரி இறந்துவிடுகிறார். அவள் நீரில் மூழ்கி இறந்தாள், அவள் உடல் மணலுக்கு அடியில் கிடந்தது என்று நம்பப்படுகிறது. வெள்ளையம்பலம் ‘தங்கம்’ என்ற சொல்லை ஒற்றுக் கேட்டு, அங்கு ஒரு செல்வம் புதைக்கப்பட்டுள்ளதாக நம்புகிறார்.

நடிகர்கள்

தயாரிப்பு

புதையல் திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் நியூட்டோன், ரேவதி கலையகங்களில் தயாரிக்கப்பட்டது. "விண்ணோடும் முகிலோடும்" என்ற பாடல் எலியட்ஸ் கடற்கரையில் படமாக்கப்பட்டது.[4]

பாடல்கள்

பாடல்களுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[5] மகாகவி பாரதியார், தஞ்சை இராமையாதாஸ், அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், எம். கே. ஆத்மநாதன் பாடல் வரிகளை எழுதியிருந்தனர்.[6]

எண். பாடல் பாடியவர்(கள்) வரிகள் நீளம்
1 "விண்ணோடும் முகிலோடும்" சி. எஸ். ஜெயராமன், பி. சுசீலா எம். கே. ஆத்மநாதன் 03:18
2 "தங்க மோகனத் தாமரையே" பி. சுசீலா 03:54
3 "உனக்காக எல்லாம் உனக்காக" ஜே. பி. சந்திரபாபு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 03:38
4 "சின்னச் சின்ன இழை" பி. சுசீலா 05:05
5 "ஹலோ, மை டியர் ராமி" ஜே. பி. சந்திரபாபு, ஏ. எல். ராகவன் 03:34
6 "ஆசை காதலை" பி. சுசீலா அ. மருதகாசி 03:07
7 "சீர் கொண்டு...கண்டி ராஜா" டி. எம். சௌந்தரராஜன், எம். கே. புனிதம், எஸ். ஜே. காந்தா தஞ்சை இராமையாதாஸ் 03:40
8 "நல்லகாலம் வருகுது" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா சுப்பிரமணிய பாரதியார் 03:25

மேற்கோள்கள்

  1. அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27. 
  2. "Pudhayal". spicyonion. http://spicyonion.com/movie/pudhayal/. பார்த்த நாள்: 2014-09-22. 
  3. "Pudhayal". the hindu. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-pudhayal/article6386449.ece. பார்த்த நாள்: 2014-09-22. 
  4. Randor Guy (2014-09-06). "Pudhayal 1957". தி இந்து இம் மூலத்தில் இருந்து 16 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210416064215/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-pudhayal/article6386449.ece. 
  5. "Pudhayal (Original Motion Picture Soundtrack)". https://music.apple.com/us/album/pudhayal-original-motion-picture-soundtrack/1331014797. 
  6. Neelamegam, G. (December 2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1. Chennai: Manivasagar Publishers. பக். 129. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=புதையல்_(1957_திரைப்படம்)&oldid=35733" இருந்து மீள்விக்கப்பட்டது