நதியை தேடி வந்த கடல்
Jump to navigation
Jump to search
நதியைத் தேடி வந்த கடல் | |
---|---|
இயக்கம் | பி. லெனின் |
தயாரிப்பு | வி. ராதா ராதா ஆர்ட்ஸ் வி. நடராஜன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சரத்பாபு ஜெயலலிதா ஸ்ரீகாந்த் |
வெளியீடு | சனவரி 15, 1980 |
நீளம் | 3640 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நதியைத் தேடி வந்த கடல் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. லெனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இப்படத்தின் கதையானது எழுத்தாளர் மகரிஷி இதே பெயரில் எழுதிய புதினத்தை அடிப்படையாக கொண்டது.[2]
நடிகர்கள்
- ஜெயலலிதா
- சரத் பாபு
- படாஃபட் ஜெயலட்சுமி
- ஸ்ரீகாந்த்
- சேகர்
- ஜமீலா
பாடல்கள்
இத்திரைப்டத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[3] பாடல் வரிகளை பஞ்சு அருணாசலம் எழுதியிருந்தார்.[4] "பூந்தோட்டம் பூவில்" பாடல் பிரபலமானதுடன் சென்னை வானொலி நிலையங்களில் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டது.[5]
பாடல் | பாடகர்(கள்) |
---|---|
தவிக்குது தயங்குது | பி. ஜெயச்சந்திரன், எஸ். பி. சைலஜா |
பூந்தோட்டம் பூவில் | எஸ். பி. சைலஜா |
எங்கேயோ ஏதோ | பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
வராத காலங்கள் | பி. சுசீலா, எஸ். பி. சைலஜா |
மேற்கோள்கள்
- ↑ "Nadhiyai Thedi Vandha Kadal (1980)". screen4screen (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-07-03.
- ↑ மலர், மாலை (2017-02-11). "ஜெயலலிதாவுடன் விஜயகுமார் நடித்த படங்கள்". Maalaimalar (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-06-20.
- ↑ "Nathiyai Thedi Vantha Kadal (1980)". Raaga.com. Archived from the original on 7 April 2023. பார்க்கப்பட்ட நாள் 7 April 2023.
- ↑ "Nadiyaiththedivantha Kadal Tamil Film EP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 3 October 2021. பார்க்கப்பட்ட நாள் 3 October 2021.
- ↑ "Movies and memories" (in en-IN). தி இந்து. 16 May 2014 இம் மூலத்தில் இருந்து 8 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230408093916/https://www.thehindu.com/features/cinema/cinema-columns/Movies-and-memories/article11634617.ece.