எம். பானுமதி (நடிகை)
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எம். பானுமதி |
---|---|
பிறந்ததிகதி | 1946 |
இறப்பு | 4 பெப்ரவரி 2013 |
பணி | நடிகை, பாரம்பரிய நடனம் |
செயற்பட்ட ஆண்டுகள் | 1965 - 2013 |
செயற்பட்ட ஆண்டுகள் | 1965 - 2013 |
குறிப்பிடத்தக்க விருதுகள் | கலைமாமணி விருது |
பிள்ளைகள் | வெங்கடலட்சுமி (மகள்) |
எம். பானுமதி (1946 - 4 பிப்ரவரி 2013) இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த நாடக மற்றும் திரைப்பட நடிகையாவார், எதிர்மறை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற இவர், தமிழ் திரையுலகில் 1970 முதல் 85 வரையிலான காலகட்டத்தில் மிகுந்த ஆதிக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவந்த நூற்றிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1][2]
தனிப்பட்ட வாழ்க்கை
சென்னை, தேனாம்பேட்டை, போயஸ் சாலையில் பானுமதி தனது ஒரே மகள் வெங்கடலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.[3] மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்த இவர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் 4 பிப்ரவரி 2013 அன்று 67 வயதில் மரணித்தார்.[4]
மற்ற படைப்புகள்
பானுமதி, சிவாஜி கணேசனுடன் இணைந்து சிவாஜி நாடக மன்றம் மற்றும் மேஜர் சுந்தர்ராஜனின் என்எஸ்என் அரங்கு போன்ற நாடக சபாக்களில் பங்கேற்று நாடகங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சிவகுமார் நினைவு கூர்ந்தபடி, அச்சானி, அப்பாவி, டெல்லி மாப்பிள்ளை, ஜஹாங்கீர், காலம் கண்ட கவிஞன், நீதியின் நிழல், வியட்நாம் வீடு , வேங்கையின் மைந்தன் மற்றும் சொந்தம் போன்ற அனைத்து வெற்றி பெற்ற நாடகங்களிலும், பிரபலமான திரைப்படங்களிலும் கதாநாயகிக்கு இணையாக காணப்பட்டுள்ளார் , மேலும் பானுமதி, சோ, ஜெய்சங்கர், வி. கோபாலகிருட்டிணன், வி. எஸ். ராகவன் மற்றும் ஷேசாத்ரி போன்ற நடிகர்களுடன் இணைந்து நாடக மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
திரைப்படவியல்
ஆண்டு | படப்பெயர் | பாத்திரப்பெயர் | மொழி | |
---|---|---|---|---|
1965 | நீ | சிறப்பு வேடம் | தமிழ் | [5] |
1966 | குமரிப் பெண் | தமிழ் | ||
1968 | பூவும் பொட்டும் | கமலா | தமிழ் | |
1968 | தில்லானா மோகனாம்பாள் | செவிலியர் மேரி | தமிழ் | |
1968 | திருமால் பெருமை | லட்சுமி (இந்துக் கடவுள்) | தமிழ் | |
1968 | நீலகிரி எக்ஸ்பிரஸ் | நாட்டிய கலைஞர் | தமிழ் | |
1969 | அக்கா தங்கை | பானுமதி | தமிழ் | [6] |
1969 | அன்னையும் பிதாவும் | தமிழ் | ||
1969 | தெய்வமகன் | நிர்மலாவின் சினேகிதி | தமிழ் | |
1969 | நிறைகுடம் | தமிழ் | ||
1969 | துலாபாரம் | நாட்டிய கலைஞர் | தமிழ் | |
1970 | சி. ஐ. டி. சங்கர் | சுஜாதா ராணி | தமிழ் | |
1970 | எங்கிருந்தோ வந்தாள் | மோகனா | தமிழ் | |
1970 | காதல் ஜோதி | தமிழ் | ||
1970 | நிழலாட்டம் | மாதவி | மலையாளம் | [7] |
1970 | ராமன் எத்தனை ராமனடி | சுமதி | தமிழ் | |
1970 | சொர்க்கம் | தமிழ் | ||
1970 | வியட்நாம் வீடு | சுமதி | தமிழ் | |
1971 | திருமகள் | பானு | தமிழ் | |
1972 | அகத்தியர் | காக்கை பாடினியார் | தமிழ் | |
1972 | இதோ எந்தன் தெய்வம் | தமிழ் | ||
1972 | என்ன முதலாளி சௌக்கியமா | தமிழ் | ||
1972 | திருநீலகண்டர் | கலாவதி | தமிழ் | |
1972 | ஆசிர்வாதம் | தமிழ் | ||
1973 | கோமாதா என் குலமாதா | Mohana | தமிழ் | |
1973 | வள்ளி தெய்வானை | தமிழ் | ||
1974 | பெண் ஒன்று கண்டேன் | தமிழ் | ||
1974 | அத்தையா மாமியா | சந்திரா | தமிழ் | |
1974 | ஒரே சாட்சி | தமிழ் | [8] | |
1974 | சமையல்காரன் | தமிழ் | ||
1974 | டைகர் தாத்தாச்சாரி | தமிழ் | ||
1975 | மனிதனும் தெய்வமாகலாம் | தமிழ் | ||
1975 | வாழ்ந்து காட்டுகிறேன் | லட்சுமி | தமிழ் | |
1976 | வாழ்வு என் பக்கம் | பிரியா | தமிழ் | |
1977 | அவன் ஒரு சரித்திரம் | தமிழ் | ||
1977 | முருகன் அடிமை | தமிழ் | ||
1981 | கடவுளின் தீர்ப்பு | தமிழ் | ||
1987 | கூட்டுப் புழுக்கள் | தமிழ் | ||
1990 | கீதாஞ்சலி | மலையாளம் | ||
1992 | தம்பி பொண்டாட்டி | தமிழ் | ||
2011 | சகாக்கள் | தேவசேனாவின் பாட்டி | தமிழ் |
மேடை நாடகங்கள்
- அச்சானி
- அப்பாவி [4]
- டெல்லி மாப்பிள்ளை [4]
- ஜஹாங்கீர் [1]
- நீதியின் நிழல் [1]
- காலம் கண்ட கவிங்கன் [1]
- சொந்தம் [4]
- வேங்கையின் மைந்தன் [1]
- வியட்நாம் வீடு [1]
தொலைக்காட்சி தொடர்கள்
இருபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் பானுமதி நடித்துள்ளார்
ஆண்டு | பெயர் | பங்கு | குறிப்பு | |
---|---|---|---|---|
2000-2001 | ரமணி VS ரமணி இரண்டாம் பாகம் | திருமதி. ரமணியின் தாய் | பழம்பெரும் இயக்குனர் கே பாலச்சந்தரின் மின்பிம்பங்கள் தயாரித்து, ராஜ் டிவியில் ஒளிபரப்பானது | [9] |
2001-2003 | அன்னி | வள்ளியம்மை | சன் டி.வி | [10] |
2003-2005 | ஆடுகிரான் கண்ணன் | சன் தொலைக்காட்சி | ||
2006-2008 | செல்லமாடி நீ எனக்கு | சன் தொலைக்காட்சி | ||
2007-2010 | மேகலா | திலகவதியின் தாய் | சன் தொலைக்காட்சி | |
2008 | திருப்பாவை | |||
2010 | அனுபல்லவி | சன் தொலைக்காட்சி | ||
2012 | வெள்ளை தாமரை | சன் தொலைக்காட்சி |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Ashok Kumar, S. R. (29 January 2013). "Grill Mill - M. Bhanumathi". http://www.thehindu.com/features/cinema/Grill-Mill-ndash-M.-Bhanumathi/article15538280.ece.
- ↑ "அன்று கண்ட முகம் - எம். பானுமதி". antrukandamugam.worpress. 11 November 2013. http://www.antrukandamugam.wordpress.com/2013/11/11/m-bhanumathi/.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2019-05-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190517073454/http://www.tamilstar.org/tamil/news-id-bhanumathi-no-more-bhanumathi-passed-away-05-02-13131577.htm.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Rangarajan, Malathy (25 April 2013). "Noted in Life Unnoticed in Death". https://www.thehindu.com/features/cinema/noted-in-life-unnoticed-in-death/article4653639.ece.
- ↑ "Nee!". இந்தியன் எக்சுபிரசு: pp. 10. 21 August 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650821&printsec=frontpage&hl=en.
- ↑ Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru (Tamil Film History and Its Achievements). பக். 738.
- ↑ "Nizhalattam (1970)". 6 October 2013. http://www.thehindu.com/features/metroplus/nizhalattam-1970/article5204338.ece/amp/.
- ↑ "Ore Satchi". http://www.cinestaan.com/movies/ore-satchi-17965.
- ↑ "Ramani vs Ramani Part II" (in en). http://www.youtube.com/playlist?list=PLVNEvSiKsSrsepwejj36KywaTF0gwiCjA.
- ↑ "Small-screen "Anni" thinks big". 2003-05-12 இம் மூலத்தில் இருந்து 2003-06-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030630040156/http://www.thehindu.com/thehindu/mp/2003/05/12/stories/2003051200710100.htm.