திருநீலகண்டர் (1972 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
திருநீலகண்டர் | |
---|---|
இயக்கம் | ஜம்பு |
தயாரிப்பு | கே. செல்வராஜ் சுடர் கொடி பிலிம்ஸ் |
இசை | சி. என். பாண்டுரங்கன் |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் சௌகார் ஜானகி |
வெளியீடு | சூன் 3, 1972 |
நீளம் | 3976 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருநீலகண்டர் (Thiruneelakandar) 1972 இல் சி. பி. ஜம்புலிங்கம் இயக்கத்திலும், கே. செல்வராஜ் தயாரிப்பிலும் வெளிவந்த இந்தியத் தமிழ் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். படத்தின் திரைக்கதை, பாடல் வரிகளை கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1] சி. என். பாண்டுரங்கன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம் திருநீலகண்ட நாயனார் என்ற கதாபாத்திரத்தில் நடிந்திருந்தார். சௌகார் ஜானகி, ஆர். எஸ். மனோகர், எம். பானுமதி, காந்திமதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1972 சூன் 3 அன்று வெளியிடப்பட்டது.[2]
நடிகர்கள்
- டி. ஆர். மகாலிங்கம்-அம்பலவாணர்/திருநீலகண்டர் அம்பலவாணர்/திருநீலகண்டர்
- நீலாவதியாக சௌகார் ஜானகி
- சிவபெருமானாக ஆர். எஸ். மனோகர்
- கலாவதியாக எம். பானுமதி
- சிந்தாமணியாக காந்திமதி
- முருகனாக சுருளி ராஜன்
- வள்ளியாக புஷ்பமாலா
- சிங்காரமாக ஏ. வீரப்பன்
- பெண் துறவியாக எஸ். டி. சுப்புலட்சுமி
- சின்ன பையாவாக உசிலைமணி
பாடல்கள்
சி. என். பாண்டுரங்கன் இசையமைத்த இப்படத்தில் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ Rangan, Baradwaj (16 August 2018). "Southern Lights: The Man Who Made (And Named) Ilayaraja". Film Companion. Archived from the original on 27 September 2022. பார்க்கப்பட்ட நாள் 18 October 2023.
- ↑ "திருநீலகண்டர் / Thiruneelakandar (1972)". Screen 4 Screen. Archived from the original on 11 December 2023. பார்க்கப்பட்ட நாள் 11 December 2023.