அத்தையா மாமியா
அத்தையா மாமியா | |
---|---|
இயக்கம் | கோபு |
தயாரிப்பு | என். ஆர். அமுதா கருடா பிலிம்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் உஷா நந்தினி |
வெளியீடு | ஆகத்து 15, 1974 |
நீளம் | 3936 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அத்தையா மாமியா 1974 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3][4][5] கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், உஷா நந்தினி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், மனோரமா, சச்சு, எம்.பானுமதி, சுகுமாரி, காந்திமதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கதை
அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு இளைஞன் ஊருக்கு வருகிறான். அவனுக்குப் பெண் தர அவனது அத்தை தன் பெண்ணோடு வந்து சேர்கிறார். அதேசமயம் அவனது மாமியின் குடும்பமும் தங்கள் பெண்ணோடு வந்து சேர்கின்றனர். இந்த அமெரிக்க மாப்பிள்ளை, இந்த இரு குடும்பங்களிடையே சிக்கித் தவிக்கிறான். இந்நிலையில் இந்த மாப்பிள்ளை தன் காதலியை மணமுடிக்க, அதனால் வரும் பிரச்சினைகளே கதையாகும்.
நடிப்பு
- சங்கராக ஜெய்சங்கர்
- உசாவாக உஷா நந்தினி as Sumathi
- மஞ்சுவாக மனோரமா
- பஞ்சாபகேசனாக வெண்ணிற ஆடை மூர்த்தி
- பாபுவாக நாகேஷ்
- மாலதியாக சச்சு
- சாரதியாக ஸ்ரீகாந்த்
- காட்டான்குளத்தானின் மனைவியாக காந்திமதி
- காட்டான்குளத்தானாக தேங்காய் சீனிவாசன்
- சச்சிதானந்தமாக வி. எஸ். ராகவன்
- இலட்சுமியாக சுகுமாரி as Lakshmi
- சந்திராவாக எம். பானுமதி
தயாரிப்பு
சென்னைத் தமிழ் பேசும் பெணான அமுதா கணேசன் கோபுவை அணுகி தான் எழுதிய கதையின் அடிப்படையில் ஒரு திரைப்படத்தை உருவாக்கித்தருமாறு கேட்டார். அவர் சூதாட்டத்தில் சம்பாதித்த பணத்தில் படத்தை தயாரித்தார்.
பாடல்கள்
இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார்.
பாடல் | பாடகர்(கள்) | நீளம் |
---|---|---|
மறந்து போச்சு | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈசுவரி | 3:36 |
நான் பெத்த மகனே நடராஜா | டி. எம். சௌந்தரராஜன் | 4:02 |
அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா | பி. சுசீலா, எல். ஆர். ஈசுவரி | 3:12 |
வரவேற்பு
சிரிக்கவும், போழுதுபோக்கவும் விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் என்று கல்கியின் எஸ். வி. எஸ். குறிப்பிட்டார்.[6] அத்தையா மாமியா 10 வாரங்கள் திரையரங்குகளில் ஓடியது.[7]
மேற்கோள்கள்
- ↑ "அத்தையா மாமியா / Athaiya Mamiya (1974)". screen4screen (in English). பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
- ↑ Karthikeyan, D. (15 August 2011). "Climax to Thangam Theatre — it's razed down". தி இந்து. https://www.thehindu.com/news/cities/Madurai/climax-to-thangam-theatre-its-razed-down/article2358763.ece.
- ↑ "Curtains come down on Thangam theatre, once Asia's largest". Firstpost. 5 August 2011. பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
- ↑ Indian Films. B.V. Dharap. 1974. p. 217.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-09-25. பார்க்கப்பட்ட நாள் 2021-12-28.
- ↑
- ↑ நரசிம்மன், டி.ஏ. (30 November 2018). "சி(ரி)த்ராலயா 44: கடத்தப்பட்ட எழுத்தாளர்!". Hindu Tamil Thisai. Archived from the original on 4 December 2020. பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
வெளி இணைப்புகள்
- 1974 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- வெண்ணிற ஆடை மூர்த்தி நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- காந்திமதி நடித்த திரைப்படங்கள்