திருக்கண்ணபுரம் இராமனதீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருக்கண்ணபுரம் இராமநதீசுவரர் திருக்கோயில்
திருக்கண்ணபுரம் இராமநதீசுவரர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
திருக்கண்ணபுரம் இராமநதீசுவரர் திருக்கோயில்
திருக்கண்ணபுரம் இராமநதீசுவரர் திருக்கோயில்
புவியியல் ஆள்கூற்று:10°52′11″N 79°42′30″E / 10.8698°N 79.7084°E / 10.8698; 79.7084
பெயர்
பெயர்:திருக்கண்ணபுரம் இராமநதீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்கண்ணபுரம்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:இராமநதீசுவரர்
(இராமநாதர்)
தாயார்:சரிவார் குழலி,
(சூளிகாம்பாள்)
தல விருட்சம்:வில்வமரம், சம்பகமரம்
தீர்த்தம்:இராம தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கல்வெட்டுகள்:உண்டு

திருக்கண்ணபுரம் இராமநதீசுவரர் கோயில் (இராமநதீச்சரம்) என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 77-ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இராமர் வழிபட வரும்போது நந்தி தடுத்ததும், அம்பாள் கருணை கொண்டு நந்தியைத் தடுத்துக் காட்சி தந்ததும் தொன்நம்பிக்கைகள். இக்கோயிலில் காணப்பட்ட கல்வெட்டில் இறைவன் பெயர் இராமநதீச்சர முடையார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • இறைவர் திருப்பெயர் : இராமநதீசுவரர் (இராமநாதர்)
  • இறைவியார் பெயர் : சரிவார் குழலி (சூளிகாம்பாள்)
  • தலமரம்: வில்வமரம், சம்பகமரம் இப்போது மகிழம்பூ மரம்தான் உள்ளது.
  • தீர்த்தம் : இராம தீர்த்தம்
  • வழிபட்டோர் : இராமர்
  • தேவாரப்பாடல்கள்: சம்பந்தர் : சங்கொளிர் முன்கையர்

திருக்கண்ணபுரம் என்று அழைக்கப்படும் இவ்வூரின் கிழக்குத் திசையில் உள்ளது இராமநதீச்சரம். இந்த இடத்தில் அமைந்துள்ள இந்த சிவாலயம் இராமநதீசரர் கோயில் என்றும் இராமநாதர் கோயில் என்றும் கூறப்படுகிறது.

வரலாறு

இத்தலத்திற்கு இராமர் வந்து வழிபட்டதாக செவிவழிக்கதைகள் கூறுகின்றன. இலங்கையில் இராமன் இராவணனைக் கொன்ற கொலைப்பாவம் அதாவது பிரம்மகத்தி தோசம் நீங்க இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

இராமன் வழிபட்டதால் இது இராமநந்தீசுவரம் என்றும் அழைக்கப்படுகிறது. இராமர் இத்தலத்திற்கு வந்தபோது நந்தி தடுத்ததாகவும், அம்பாள் கருணை கொண்டு நந்தியை தடுத்து, இராமருக்கு காட்சி தந்ததாகவும் பின்பு இராமர் தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இராம நந்தீசுவரம் என்பது மருவி இராமநதீசுவரம் ஆயிற்று என்போரும் உண்டு. இதற்குச் சான்றாக இத்தலத்திற்குரிய சோமாசுகந்த மூர்த்தத்தில் நந்திதேவர் உள்ளார்.

நுழைவாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடப்புறத்தில் இறைவி சன்னதி உள்ளது. மூலவர் கருவறை கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் கணபதி, வள்ளி தெய்வானை சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேசுவரர், சரிவார்குழலி அம்மன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. நந்தன ஆண்டு ஐப்பசி 26-ஆம் நாள், 11.11.2012 ஞாயிறு அன்று குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு கோயிலில் உள்ளது.

தலசிறப்புகள்

மூலவர் பெரிய திருவுருவம். உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணம். சுவாமியின் விமானம் வேசர அமைப்புடையது. கல்வெட்டில் சுவாமியின் பெயர் இராமனதீச்சர முடையார் என்று காணப்படுகிறது. குலோத்துங்கன் இக்கோயிற் பூசைக்காக சிவபாதசேகர மங்கலம் என்னும் பெயருடைய நிலப்பகதியை தானமாக அளித்த செய்தியும் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.

அமைவிடம்

திருவாரூர் நாகப்பட்டினம் இடையில் அமைந்துள்ளது.

திருவாரூரில் இருந்து 13, 22, 14 ஆகிய எண் உடைய பேருந்தில் திருக்கண்ணபுரம் வரலாம். 13 எண் பேருந்தில் திருக்கண்ணபுரம் பால்குட்டை நிறுத்தத்தில் இறங்கி, முதலியார் தெருவில் சண்முக முதலியார் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள சந்தில் சென்றால் கோயிலை அடையலாம். 11 எண் பேருந்தில் நாகப்பட்டினம் இருந்து திருக்கண்ணபுரம் வரலாம்.

வெளி இணைப்பு

இவற்றையும் பார்க்க

படத்தொகுப்பு