மலரின் மாண்பு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மலரின் மாண்பு அனைத்தும் பெற்றிருக்கும் ஆசிரியரே நல்லாசிரியர் என்று நன்னூல் விளக்கிக் கூறுகிறது.

மங்கலப் பொருளாகவும் எச்செயலையும் அலங்கரிப்பதற்கு மிக இன்றியமையாததாகவும், மகிழ்ந்து எல்லோரும் மேலே சூட்டிக் கொள்ளக்கூடியதாகவும் மென்மைத் தன்மையுடையதாகவும் மலரும் நேரத்தில் முகம் விரிந்து மலர்வதாகவும் விளங்குவது மலரின் இயல்பாகும்.

மலரின் இவ்வியல்புகள் ஓர் ஆசிரியரிடமும் அமைந்திருக்க வேண்டும். ஆசிரியர் நற்செயலுக்கு உரியவராய் இருக்கவேண்டும், எல்லாச் செயல்களையும் சிறப்பிக்க அவர் இன்றியமையாதவராகவும், யாவரும் மகிழ்ந்து அவரைப் போற்றிடும் தன்மைகளை உடையவராகவும், பாடம் சொல்லும் காலத்தில் முகம் மலர்ந்து கற்பிக்கும் இயல்பு உடையவராகவும் இருக்கவேண்டும். மலரின் பண்புகள் அத்தனையும் தனக்குள் கொண்டிருப்பவரே நல்லாசிரியர் ஆவார்.[1]

அடிக்குறிப்புகள்

  1. மங்கல மாகி இன்றி யமையாது
    யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப்
    பொழுதின் முகமலர் வுடையது பூவே. - நன்னூல் 30

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மலரின்_மாண்பு&oldid=20149" இருந்து மீள்விக்கப்பட்டது