செருகுடி சூட்சுமபுரீசுவரர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
(செருகுடி சூஷ்மபுரீஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருச்சிறுகுடி சூட்சுமபுரீசுவரர் திருக்கோயில்
திருச்சிறுகுடி சூட்சுமபுரீசுவரர் திருக்கோயில் is located in தமிழ் நாடு
திருச்சிறுகுடி சூட்சுமபுரீசுவரர் திருக்கோயில்
திருச்சிறுகுடி சூட்சுமபுரீசுவரர் திருக்கோயில்
சூட்சுமபுரீசுவரர் கோயில், செருகுடி , திருவாரூர், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூற்று:10°57′55″N 79°35′20″E / 10.9652°N 79.5889°E / 10.9652; 79.5889
பெயர்
புராண பெயர்(கள்):திருச்சிறுகுடி
பெயர்:திருச்சிறுகுடி சூட்சுமபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:செறுகுடி
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:மங்களநாதர், சிறுகுடியீசர், சூட்சுமபுரீசுவரர்
தாயார்:மங்கள நாயகி
தல விருட்சம்:வில்வம்
தீர்த்தம்:மங்கள தீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

செருகுடி சூட்சுமபுரீசுவரர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 60ஆவது சிவத்தலமாகும்.

அமைவிடம்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது.

அமைப்பு

ராஜகோபுரத்தை அடுத்து பலி பீடம், நந்திமண்டபம் ஆகியவை உள்ளன. மூலவர் சன்னதியின் இடது புறத்தில் மங்களாம்பிகை சன்னதியும், நவக்கிரகங்கள் சன்னதியும் உள்ளன. கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை, திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மங்கள விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்காரகன் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன.

சிறப்புகள்

இத்தலத்தில் தேவி கைப்பிடியளவு மணலால் பிடித்து வைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. சங்க இலக்கியங்களில் புறநானூற்று நூலில் புகழ்ந்து கூறப்படும் பண்ணன் என்னும் கொடைவள்ளல் பிறந்த தலம் எனப்படுகிறது. இத்தல மூலவருக்கு அபிஷேகம் இல்லை. சாம்பிராணித் தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது.

குடமுழுக்கு

இக்கோயிலில், 4 சூலை 1976 (நள வருடம் ஆனி 21), 15 சூலை 2002 (சித்ரபானு வருடம் ஆனி 31), 22 மே 2013 (விஜய வருடம் வைகாசி 8 புதன்) ஆகிய நாட்களில் குடமுழுக்குகள் நடைபெற்றதற்கான கல்வெட்டுகள் உள்ளன.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

படத்தொகுப்பு

வெளி இணைப்புகள்