கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
திருக்கன்றாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்கன்றாய்பூர்
பெயர்:திருக்கன்றாப்பூர் நடுதறியப்பர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:கோயில் கண்ணாப்பூர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:நடுதறியப்பர், வஸ்ததம்பபுரீஸ்வரர், நடுதறிநாதர்
தாயார்:ஸ்ரீ வல்லிநாயகி, மாதுமைநாயகி
உற்சவர் தாயார்:பிடாரியம்மன்
தல விருட்சம்:கல்பனை
தீர்த்தம்:கங்காமிர்தம், சிவகங்கை (எதிரில் உள்ளது), ஞானாமிர்த்தம், ஞானகுபம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருநாவுக்கரசர்

கோயில் கண்ணாப்பூர் நடுதறியப்பர் கோயில் திருநாவுக்கரசரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும்.

அமைவிடம்

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 120ஆவது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தினின் திருவாரூர் வட்டத்தில் கோயில் கண்ணாப்பூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் நடுதறியப்பர், தாயார் மாதுமைநாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக கல்பனை மரமும், தீர்த்தமாக கங்காமிர்தம், சிவகங்கை , ஞானாமிர்த்தம் மற்றும் ஞானகுபம் ஆகியவை உள்ளன.

இத்தலத்தில் வைணவனுக்கு மனைவியான சைவப்பெண் ஒருவர் சிவலிங்க வழிபாடு செய்வது கண்டு அதனைக் கிணற்றில் எறிந்த பின்னர் அந்த சைவ பக்தை, பசுவின் கன்றைக் கட்டப் பயன்படும் முளையை (ஆப்பு) சிவலிங்கமாக வழிபட, கணவன் சினம் கொண்டுகோடரியால் அந்த முளையை வெட்ட இறைவன் வெளிப்பட்டு அருள் புரிந்தார் என்பது தலவரலாறு. வெட்டப்பட்ட தழும்பு சுவாமி மீது உள்ளது.

இடும்பம் வழிபட்ட தலம்.[1]

மேற்கோள்கள்

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; பக்கம் 250

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

அருள்மிகு நடுதறியப்பர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்