கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்
Jump to navigation
Jump to search
தேவாரம் பாடல் பெற்ற கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்[1] | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கடிக் குளம் |
பெயர்: | கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில்[1] |
அமைவிடம் | |
ஊர்: | கற்பகநாதர்குளம் |
மாவட்டம்: | திருவாரூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கற்பகநாதர், கற்பகேசுவரர் |
தாயார்: | பாலசௌந்தரியம்மை, சௌந்தர நாயகி |
தல விருட்சம்: | பலா |
தீர்த்தம்: | விநாயக தீர்த்தம் (கடிக்குளம்) |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத் தலங்களில் 109ஆவது சிவத்தலமாகும். முன்னோர்களின் சாபம் நீங்க செல்ல வேண்டிய ஆசியாவின் ஒரே ஸ்தலம் என்ற பெருமதிப்பிற்குரிய இடம் ஆகும்.
தல விநாயகர்
இத்தலத்து விநாயகர் மாங்கனிப் பிள்ளையார், கற்பக விநாயகர்.[1]
வழிபட்டோர்
இராமபிரான், கார்த்திகாச்சுரன் எனும் அசுரன் ஆகியோர் வழிபட்ட தலம்.[1]
ஒளவையார்
இத்தலம் முருகப்பெருமான் ஒளவையாரிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு விளையாடிய தலம். இத்தலத்தில் விநாயகர் இறைவனை வழிபட்டு மாங்கனி பெற்றார் என்பது தொன்நம்பிக்கை. இங்கிருந்து இரண்டு கி.மீ தொலைவிலுள்ள துளசியாம்பட்டினம் என்ற ஊரில் ஒளவையாருக்கு தனிக்கோயில் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: இடும்பாவனம் சற்குணநாதர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் தண்டலச்சேரி நீள்நெறிநாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 109 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 109 |