வலஜி
தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 18:17, 23 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
வலஜி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 16வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய சக்ரவாகம் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இதர அம்சங்கள்
| ஆரோகணம்: | ஸ க3 ப த2 நி2 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி2 த2 ப க3 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம்(நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- ரி, ம என்னும் ஸ்வரங்கள் வர்ஜம் ஆதலால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
- இது ஒரு ஔடவ இராகம்.
- இது ஒரு உபாங்க இராகம்.
- இது ஒரு சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும்.
- இது திரிஸ்தாயி இராகம் ஆகும். மேலும் எப்போதும் பாடக் கூடியது.
- மூர்ச்சனாகர ஜன்ய இராகம். இதன் பஞ்சம மூர்ச்சனையே ஆபோகி இராகம் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணைகள்
- Dr. S. Bhagyalekshmy, Ragas in Carnatic Music, CBH Publications, Trivandrum, Published 1990
- B. Subba Rao, Raganidhi, The Music Academy, Madras, Published 1965, 4th reprint 1996
| |||||||
"https://tamilar.wiki/w/index.php?title=வலஜி&oldid=492937" இலிருந்து மீள்விக்கப்பட்டது