கவாம்போதி
Jump to navigation
Jump to search
கவாம்போதி கருநாடக இசையின் 43ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 43ஆவது இராகம் கீர்வாணி.[1][2][3]
இலக்கணம்
| ஆரோகணம்: | ஸ ரி1 க2 ம2 ப த1 நி1 ஸ் |
| அவரோகணம்: | ஸ் நி1 த1 ப ம2 க2 ரி1 ஸ |
- இது வசு என்றழைக்கப்படும் 8ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) முதல் இராகம்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், சுத்த தைவதம்(த1), சுத்த நிஷாதம் (நி1) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள்
- இது ஒரு விவாதி மேளம்.
- இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் சேனாவதி (07) ஆகும்.
- கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் தைவத சுரம் முறையே ஹாடகாம்பரி (18) மேளம் தோற்றுவிக்கிறது (மூர்ச்சனாகாரக மேளம்).
உருப்படிகள்
| வகை | உருப்படி | இயற்றியவர் | தாளம் |
|---|---|---|---|
| கிருதி | நமோமஸ்தி கீர்வாணி | முத்துசுவாமி தீட்சிதர் | த்ரிபுட |
| கிருதி | வீரராகவ | கோடீஸ்வர ஐயர் | ஆதி |