பகுதாரி
Jump to navigation
Jump to search
பகுதாரி இருபத்தெட்டாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய அரிகாம்போதியின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
இந்த இராகத்தில் சட்சம் (ச), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), கைசிக நிசாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு[1]:
| ஆரோகணம்: | ச க3 ம1 ப த2 நி2 ச் |
| அவரோகணம்: | ச் நி2ப ம1 க3 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 5 சுரங்களும் உள்ளன. இதனால் இது சாடவ ஔடவ இராகம் எனப்படுகின்றது.
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ Music Handbook - Raga Index -B 18 பெப் 2011 அன்று பார்க்கப்பட்டது.
வெளியிணைப்புகள்
- Brovabharama-Bahudari-Tyagaraja, ரஞ்சனி - காயத்ரி சகோதரிகளின் வாய்ப்பாட்டுக் காணொலி