பேகடா
தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 14:46, 20 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (சில மாற்றங்கள், சேகரிப்புகள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பேகடா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
இந்த இராகத்தில் சட்சம் (ச), அந்தர காந்தாரம் (க3), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
| ஆரோகணம்: | ச க3 ரி2 க3 ம1 ப த2ப ச் |
| அவரோகணம்: | ச் நி3 த2 ப ம1 க3 ரி2 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர்.
இவற்றையும் பார்க்கவும்
| |||||||
"https://tamilar.wiki/w/index.php?title=பேகடா&oldid=450094" இலிருந்து மீள்விக்கப்பட்டது