பூர்வி
தமிழர்விக்கியிலிருந்து
imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 10:42, 13 சனவரி 2012 அன்றிருந்தவாரான திருத்தம் (→இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
பூர்வி பதினைந்தாவது மேளகர்த்தா இராகமும், "அக்னி" என்று அழைக்கப்படும் மூன்றாவது சக்கரத்தின் மூன்றாவது இராகமுமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும்.
இலக்கணம்
இந்த இராகத்தில் சட்சம் (ச), சுத்த ரிசபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிசாதம் (நி3), ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:
| ஆரோகணம்: | ச ரி1 க3 ம1 ப த1 நி3 த1 ச் |
| அவரோகணம்: | ச் நி3 த1 ப ம1 த1 ம1 க3 ரி1 ச |
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்திருக்கிறது. இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண" இராகம் என்பர். இதில் ஆரோகணத்தில் தைவதம் ஒழுங்குமாறி வருவதுடன், அவரோகணத்தில் தைவதமும், மத்திமமும் ஒன்றுக்கு மேற்பட ஒழுங்கு மாறி வருகின்றன. இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்
| சுத்த மத்திம இராகங்கள் |
| ||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பிரதி மத்திம இராகங்கள் |
| ||||||||||||
"https://tamilar.wiki/w/index.php?title=பூர்வி&oldid=446602" இலிருந்து மீள்விக்கப்பட்டது