ஆரபி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 05:21, 16 மே 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

ஆரபி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 29வது மேளகர்த்தா இராகமும், "பான" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். பண்டைய தமிழிசைப் பண்களில் பழந்தக்கராகம் என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.[1]

இலக்கணம்

ஆரபி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
படிமம்:தீரசங்கராபரணம்.svg
ஆரபி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம் (ப), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3), அந்தர காந்தாரம் (க3) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி21 ப த2 ச்
அவரோகணம்: ச் நி32 ப ம13 ரி2
  • இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "ஔடவ சம்பூரண" இராகம் என்பர்.

மேற்கோள்கள்

  1. அ. கி. மூர்த்தி (1998). சைவ சித்தாந்த அகராதி. சென்னை: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 161.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=ஆரபி&oldid=266608" இலிருந்து மீள்விக்கப்பட்டது