பத்மசிறீ

தமிழர்விக்கியிலிருந்து
(பத்மசிறீ விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பத்மஶ்ரீ
விருது குறித்தத் தகவல்
வகை குடிமக்களுக்கான விருது
பகுப்பு தேசிய விருது
நிறுவியது 1954
முதலில் வழங்கப்பட்டது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 2025
மொத்தம் வழங்கப்பட்டவை 3448
வழங்கப்பட்டது இந்திய அரசு
நாடா படிமம்:IND Padma Shri BAR.png
விருது தரவரிசை
பத்ம பூசன்
பத்ம பூசன்[1]பத்மஶ்ரீ → சர்வட்டோம் யுத்த சேவா பதக்கம்[2]

பத்மஶ்ரீ (Padma Shri) என்பது இந்திய அரசு குடிமக்களுக்கு வழங்கும் உயரிய விருது ஆகும். பத்ம என்றால் சமசுகிருதத்தில் தாமரை என்று பொருள். ஸ்ரீ என்பது திருவாளர் என்பதனைக் குறிக்கும். கலை, கல்வி, தொழில், இலக்கியம், அறிவியல், விளையாட்டு, சமூக சேவை, பொதுவாழ்வு முதலிய பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்களித்த குடிமக்களுக்குப் பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இவ்விருதினை ஜனவரி 2, 1954 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் நிறுவினார். இது பாரத ரத்னா, பத்ம விபூசன், பத்ம பூசன் ஆகிய விருதுகளுக்கு அடுத்தபடியாக நான்காவது உயர் விருதாக அமைந்துள்ளது. 2025 வரை, 3448 நபர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. 2025-இல் மட்டும் 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.[3]

மேற்கோள்கள்

  1. "Precedence Of Medals". Website. Indian Army. Retrieved 9 September 2014.
  2. "The Official Home Page of the Indian Army". www.indianarmy.nic.in.
  3. "Padma Awards 2025" (PDF). www.mha.gov.in. 25 Jan 2025. Archived from the original (PDF) on 2025-01-25. Retrieved 2025-02-08.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பத்மசிறீ&oldid=425799" இலிருந்து மீள்விக்கப்பட்டது