அன்பே உன்வசம்
அன்பே உன்வசம் | |
---|---|
இயக்கம் | ஆர். பாலு |
தயாரிப்பு | அழகன் தமிழ்மணி |
கதை | ஆர். பாலு |
இசை | தினா (இசையமைப்பாளர்) |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | அப்துல் ரகுமான் |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | அன்னை வண்ணமதி பிலிம்ஸ் |
வெளியீடு | திசம்பர் 5, 2003 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்பே உன் வசம் (Anbe Un Vasam) என்பது 2003 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். ஆர். பாலு இயக்கிய இந்தப் படத்தில் புதுமுகம் அஷ்வின், ரதி ஆறுமுகம் மற்றும் புதுமுகம் யோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கருணாஸ், ரகுவரன், மீரா கிருஷ்ணன், பல்லவி, வினு சக்ரவர்த்தி, பாண்டு, மதன் பாப், மனோபாலா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். அழகன் தமிழ்மணி தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு, தினா இசையமைத்தார். இப்படம் 2003 திசம்பர் 5 அன்று வெளியானது.[1][2]
உதகையைச் சேர்ந்த அஷ்வின் (அஷ்வின்), இறுதியாண்டில் கல்லூரியில் சேர சென்னை செல்கிறான். மிக இனிய ஆரம்ப சந்திப்புக்குப் பிறகு, அஷ்வின் தனது கல்லூரித் தோழியான பாரதியை ( ரதி ஆறுமுகம் ) மெல்ல காதலிக்கத் துவங்குகிறான். அவள் அவனுடைய உண்மையான காதலைப் புரிந்துகொண்டு அவன் காதலை ஏற்றுக் கொள்கிறாள். படிப்பை முடித்த பிறகு, அவர்கள் ஒரு கோவிலில் சந்திக்கிறார்கள். அஸ்வின் அவர்களுள் பிரிவு ஏற்படுமோ என்று அஞ்சி, பாரதியை உடனே பதிவுத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்கிறான். ஆனால் வாழ்வின் நடைமுறைகளை உணர்ந்த பெண்ணான பாரதிக்கு வேறு திட்டங்கள் உள்ளன. அஷ்வினுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று அவள் விரும்புகிறாள். பின்னர் அவள் அவளுடைய குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவனை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று விரும்புகிறாள். அஸ்வினால் அவளை நம்ப முடியவில்லை. ஏனென்றால் கல்லூரி காலத்தில் பல காதலர்கள் பிரிந்து விடுவதைக் கண்டுள்ளான். அவனால் புண்படுத்தப்பட்ட பாரதி அவனைத் திட்டிவிட்டு புண்பட்ட மனதுடன் சென்றுவிடுகிறாள். அஷ்வின் ஊட்டிக்குச் செல்கிறான். அதே நேரத்தில் பாரதியும் அவரது குடும்பமும் கோயம்புத்தூருக்கு இடம் பெயர்கிறது.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு, முன்னாள் மாணவர்கள் சந்திப்பில், அஷ்வின் பாரதியையும், அவளின் குடும்ப நண்பரான அசோக்கையும் (யோகன்) சந்திக்கிறான். விரைவில் பாரதியை தான் திருமணம் செய்து கொள்வதாக அஷ்வினிடம் அசோக் கூறுகிறான். அன்று மாலை, அஷ்வினிடம் பாரதி தனக்கு அவன் கூறியது பற்றி தெரியாது என்று கூறுகிறாள். அவள் அவனை திருமணம் செய்து கொள்வதாக சத்தியம் செய்துவிட்டு, அவனைவிட்டு பிரிந்து சென்றதற்காக அவனிடம் மன்னிப்பு கேட்கிறாள். அவள் வீட்டிற்கு வந்தபோது, அவளுடைய பெற்றோர் அவளுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்துள்ளதாக கூறுகின்றனர். அசோக் அவளின் திருமணம் பற்றி அவள் பெற்றோரை சமாதானப்படுத்துகிறான். அதன்பிறகு, அஷ்வின் குன்னூரில் அரசு வேலையில் இணைகிறான். அஷ்வினும் பாரதியும் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள முயல்கின்றனர். இதனால், பாரதி அவனது பணியிடத்திற்கு செல்ல முடிவு செய்கிறாள். அவள் குன்னூருக்கு வரும்போது, பலத்த மழை பெய்கிறது. அதனால் நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன. நிலச்சரவினால் அது சரிந்துவந்த பகுதியில் உள்ள அனைத்தையும் அழித்து செல்கிறது. அஸ்வினின் அலுவலகம் பாரதியின் கண் முன்னே சரிகிறது. அந்த அதிர்ச்சியில், அவள் இறந்துவிடுகிறாள். பல மணிநேரங்களுக்குப் பிறகு, மீட்புப் பணியாளர்கள் பாரதியையும், அஷ்வினையும் கண்டுபிடிக்கின்றனர். அஷ்வின் உயிர் பிழைக்கிறான். ஆனால் பாரதி காயங்களால் இறந்துவிடுகிறாள்.
நடிப்பு
- அஸ்வின் -அ்வினாக
- ரதி (நடிகை) -பாரதியாக
- யோகன் -அசோக்காக
- கருணாஸ் -ஜே.கே.வாக
- ரகுவரன் -வி. ரத்தினவேல் பாண்டியனாக
- மீரா கிருஷ்ணன் பாரதியின் தாய் ஜெய்சிறீயாக
- பல்லவி அஸ்வினின் தாயாக
- வினு சக்ரவர்த்தி -நாடாளுமன்ற உறுப்பினராக
- அனு மோகன் -கல்லூரி தலைவராக
- வெண்ணிற ஆடை மூர்த்தி -பேராசிரியர் கலிவரதனாக
- பாண்டு பேராசிரியராக
- மதன் பாப் பேராசிரியராக
- மனோபாலா பேராசிரியராக
- ஹேமலதா அஸ்வினின் சகோதரி ஹேமாவாக
- விநாயக் ராஜ் - பாரதியின் சகோதரன் மதியாக
- வையாபுரி (நடிகர்) உசேனாக
- கொட்டாச்சி மாணவனாக
- லூசு மோகன்
- கே. சிவசங்கர்
- இலாவண்யா
- சோபணா - சோபாவாக
- பூச்சி செந்தில் - நெப்போலியனாக
- சாத்தப்பன் நந்தகுமார்
- பிரேம் மேனன்
- வள்ளி ராஜன்
- சொர்ணா
- இராஜ்மோகன்
- சரத்சந்திரா
- கோவை செந்தில்
- பாண்டியன் விருந்தினர் தோற்றத்தில்
- சாம்ஸ் கல்லூரி மாணவராக
தயாரிப்பு
காலமெல்லாம் காதல் வாழ்க (1997) மற்றும் உன்னுடன் (1998) போன்ற காதல் படங்களை இயக்கிய ஆர். பாலு, அன்பே உன் வசம் படத்தில் அஸ்வின் என்ற புது முகத்தை அறிமுகப்படுத்தினார். திரைப்படங்களுக்கு வருவதற்கு முன்பு, அஸ்வின் திரைப்படக் கல்லூரியில் நடிப்பைத் தவிர திரைப்பட நடனம் மற்றும் சண்டைப் பயிற்சி போன்றவற்றை கற்றுக்கொண்டார். ரதி ஆறுமுகம் நாயகி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அதே நேரத்தில் தயாரிப்பாளரின் மகன் இரண்டாவது கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டார். படத்தின் இசைக்காக தினா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஒளிப்பதிவுக்கு அப்துல் ரகுமானின் தேர்வு செய்யப்பட்டார். மொரிஷியஸில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டன. இதுபற்றி குறிப்பிட்ட திரைப்பட தயாரிப்பாளர், "மொரீசியஸ் அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு முழு காவல் துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும் மொரிசியசின் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் தங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது" என்று கூறினார்.[3][4]
திரைப்பட பாடல் இசை மற்றும் பின்னணி இசை போன்றவற்றை திரைப்பட இசையமைப்பாளர் தினா அமைத்தார்.[5]
எண் | பாடல் | பாடகர் (கள்) | பாடல் வரிகள் | காலம் |
---|---|---|---|---|
1 | "ஆசர வைத்தன" | ஹரிஹரன் | வாலி | 4:27 |
2 | "கலர் வருது" | மாணிக்க விநாயகம், திப்பு | காதல் மதி | 4:36 |
3 | "ஒரே ஒரு பார்வையால்" | கார்த்திக், சாதனா சர்கம் | பா. விஜய் | 5:01 |
4 | "திருமுகம்" | சின்மயி | பிறைசூடன் | 3:19 |
5 | "எங்க போற" | உதித் நாராயண், பாப் ஷாலினி | கண்மணி சுப்பு | 4:16 |
6 | "ஏங்காவது" | சங்கர் மகாதேவன், சுஜாதா மோகன் | கபிலன் | 4:54 |
குறிப்புகள்
- ↑ "Anbe Un Vasam (2002) Tamil Movie". spicyonion.com. https://spicyonion.com/movie/anbe-un-vasam/.
- ↑ "Jointscene : Tamil Movie Anbe Un Vasam". jointscene.com இம் மூலத்தில் இருந்து 4 February 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100204191738/http://jointscene.com/movies/Kollywood/Anbe_Un_Vasam/2943.
- ↑ "Movie: Anbe Un Vasam". kollywood.allindiansite.com இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304113548/http://kollywood.allindiansite.com/previews/anbe_un_vasam.html.
- ↑ "Indian cinema showcase - Knock Knock I am looking to marry!". idlebrain.com. http://idlebrain.com/movie/showcase/knockknock.html.
- ↑ "Anbe Un Vasam (2003) - Dhina". mio.to இம் மூலத்தில் இருந்து 13 செப்டம்பர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180913070905/http://mio.to/album/Anbe+Un+Vasam+(2003).