லூசு மோகன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
லூசு மோகன்
Loose-Mohan.jpg
ஆறுமுகம் மோகனசுந்தரம்
பிறப்பு8 பெப்ரவரி 1928
காஞ்சிபுரம்,
தமிழ்நாடு இந்தியாஇந்தியா
இறப்புசெப்டம்பர் 16, 2012(2012-09-16) (அகவை 84)[1]
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1944-2002

லூசு மோகன் என அழைக்கப்படும் ஆறுமுகம் மோகனசுந்தரம் (Arumugam Mohanasundaram, 8 பெப்ரவரி 1928 - 16 செப்டம்பர் 2012), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார். சென்னைத் தமிழில் சரளமாகப் பேசி நடித்ததனால் இவர் பிரபலமானார்.[1] பல மேடை நாடகங்களிலும் இவர் நடித்திருக்கிறார்.

வாழ்க்கைச் சுருக்கம்

காஞ்சிபுரத்தில் பிறந்தவர் மோகன். இவரது தந்தை லூசு ஆறுமுகமும் ஒரு நகைச்சுவை நடிகரே. 1944 ஆம் ஆண்டில் வெளியான ஹரிச்சந்திரா திரைப்படத்தில் பு. உ. சின்னப்பாவிடன் இணைந்து நடித்தார்.[1] ஆனாலும், இவர் பிற்காலத்தில் கமலகாசன், இரசினிகாந்து ஆகியோரின் திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.[1]

1979 இல் வெளியான ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்ற திரைப்படம் இவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது.[1] தொடர்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழ் தவிர மராத்தி, போச்புரி, இந்தி, துளு ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.[1] 2000 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1]

பிற்காலம்

இவரது கடைசித் திரைப்படம் தங்கர் பச்சானின் அழகி (2002) ஆகும். இவரது மனைவி பச்சையம்மாள் 2004 ஆம் ஆண்டில் இறந்து விட்டார். லூஸ் மோகன் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது சொந்த வீட்டில் மகன் கார்த்திகேயனுடன் வசித்து வந்தார். உடல்நலக் குறைவு காரணமாக 2012 செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை காலமானார். மறைந்த லூஸ் மோகனுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Peter, Petlee (17 செப்டம்பர் 2012). "Tamil comedian 'Loose' Mohan passes away". த இந்து. http://www.thehindu.com/news/cities/chennai/article3904807.ece. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=லூசு_மோகன்&oldid=22109" இருந்து மீள்விக்கப்பட்டது