ஏ. வீரப்பன்

ஏ. வீரப்பன் (A. Veerappan, 21 யூன் 1933 – 2005) என்பவர் ஒரு தமிழ் நகைச்சுவை நடிகர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். 1960 களில் நடிகர் நாகேசுடன் இணைந்து நகைச்சுவை வேடங்களில் நடித்ததற்காக குறிப்பிடப்படுகிறார்.

ஏ. வீரப்பன்
பிறப்புவீரப்பன்
21 யூன் 1933[1]
பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்
இறப்பு30 ஆகத்து 2005 (வயது 72)
சாலிகிராமம், சென்னை, சென்னை
தேசியம்இந்தியர்
பணிநடிகர், திரைக்கதை எழுத்தாளர், நகைச்சுவை எழுத்தாளர், இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
1956-1988
குறிப்பிடத்தக்க படைப்புகள்வைதேகி காத்திருந்தாள்
உதயகீதம்
இதயகோயில்
கரகாட்டக்காரன்
சின்னத் தம்பி
வாழ்க்கைத்
துணை
பொற்கொடி
பிள்ளைகள்3

1970களில் பெரும்பாலான படங்களில் சுருளி ராஜனுக்காக நகைச்சுவைக் காட்சிகளை இவர் எழுதினார். இவர் தெனாலிராமன் (1956) திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். 1980கள் மற்றும் 1990களில் பெரும்பாலான படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கு நகைச்சுவைக் காட்சிகளை எழுதினார். வைதேகி காத்திருந்தாள், உதயகீதம், இதயகோயில், கரகாட்டக்காரன், சின்னத் தம்பி போன்ற படங்களில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். கரகாட்டக்காரனில் இடம்பெற்ற வாழைப்பழ நகைச்சுவைக் காட்சி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று, திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அது நகைச்சுவையில் கவுண்டமணியையும் செந்திலையும் புகழின் உச்சிக்கு கொண்டு வந்தது.

ஆரம்ப கால வாழ்க்கை

வீரப்பன் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆவணத்தில் பிறந்தார். இளம் வயதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சக்தி நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்தார். அன்றைக்கு இவரை ஊக்கப்படுத்திய மூன்று பெரிய நடிகர்களாக எஸ். வி. சுப்பையா, நம்பியார், எஸ். ஏ. நடராஜன், எஸ். ஏ. கண்ணன் ஆகியோர் இருந்தனர். பின்னர், சிவாஜி கணேசன் சக்தி நாடகக் குழுவில் சேர்ந்து வீரப்பனுடன் இணைந்து நடித்தார். நாடக நாட்களில் இவர்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 1950இல் சிவாஜி கணேசன் என் தங்கை நாடகத்தில் நாயகனாக நடித்தபோது பராசக்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் திரைப்படத்தில் நடிக்கப் போனதால் வீரப்பன் அவருக்கு பதில் அந்தப் பாத்திரத்தை ஏற்றார். அதன்படி 25 வாரங்களுக்கும் மேலாக தமிழகத்தின் பல பகுதிகளில் இவர் நாயகனாக நடிக்க நாடகம் நடந்தது. [2] [3] வீரப்பன் நகைச்சுவைக் காட்சிகளை எழுதிய முதல் படம் பணத்தோட்டம், ஆனால் மெட்ராஸ் டு பாண்டிச்சேரி இவரது திரைவாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. [4]

திரைப்பட வாழ்க்கை

கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்த கரகாட்டக்காரன், வைதேகி காத்திருந்தாள், இதயக் கோவில், உதய கீதம் போன்ற பல படங்களுக்கு வீரப்பன் நகைச்சுவை காட்சிகளை எழுதியுள்ளார். தெய்வீக ராகங்கள் (1980) என்ற ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். கரகாட்டகாரனில் இவரது நகைச்சுவை காட்சிகள் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் இவருக்கு நல்ல பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது. [5]

குடும்பம்

இவருக்கு பொற்கொடி என்ற மனைவியும், சாந்தி, உமா என்ற இரு மகள்களும், ஆனந்த் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இறப்பு

வீரப்பன் மாரடைப்பால் 2005 ஆகத்து 30 அன்று சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறந்தார்.

திரைப்படவியல்

இது ஒரு பகுதித் தொகுப்பு மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.

நடிகராக

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1956 தெனாலி ராமன்
1959 நாலு வேலி நிலம்
1962 சாரதா
1962 படித்தால் மட்டும் போதுமா
1963 பணத்தோட்டம் ராமுவின் நண்பன்
1964 தாயின் மடியில்
1964 அம்மா எங்கே
1964 ஆயிரம் ரூபாய்
1965 கலங்கரை விளக்கம் தேவா, சுற்றுலா வழிகாட்டி
1965 ஹலோ மிஸ்டர் ஜமீன்தார்
1965 தாழம்பூ மகிழுந்து ஓட்டுநர்
1966 யார் நீ? அனந்த் வீட்டு வேலைக்காரன்
1966 நாடோடி
1966 மதராஸ் டு பாண்டிச்சேரி ஒரு பிராமணர்
1967 சோப்பு சீப்பு கண்ணாடி
1967 கண் கண்ட தெய்வம்
1968 ஒளி விளக்கு
1968 பூவும் பொட்டும்
1968 ஜீவனாம்சம்
1968 குடியிருந்த கோயில்
1969 பொண்ணு மாப்பிள்ளை
1969 குழந்தை உள்ளம்
1970 நம்ம வீட்டு தெய்வம்
1971 தெய்வம் பேசுமா
1971 இரு துருவம்
1971 சவாலே சமாளி நாட்டாமை
1971 துள்ளி ஓடும் புள்ளிமான்
1972 அன்னை அபிராமி
1972 திருநீலகண்டர் சிங்காரம்
1972 அவசரக் கல்யாணம்
1973 சொல்லத்தான் நினைக்கிறேன்
1973 பட்டிக்காட்டு பொன்னையா
1973 பொன்னூஞ்சல் சப்பாணி
1975 எல்லோரும் நல்லவரே
1977 நல்லத்துக்குக் காலமில்லை
1981 ஆணிவேர்
1981 சின்னமுள் பெரியமுள் கிருஷ்ணமூர்த்தி
1982 பட்டணத்து ராஜாக்கள்
1985 உதயகீதம்
1984 அந்த ஜூன் 16ஆம் நாள்
1988 செண்பகமே செண்பகமே

நகைச்சுவை எழுத்தாளராக

ஆண்டு திரைப்படம் நகைச்சுவை நட்சத்திரங்கள்
1982 பயணங்கள் முடிவதில்லை கவுண்டமணி
1984 வைதேகி காத்திருந்தாள் கவுண்டமணி, செந்தில்
1985 உதயகீதம் கவுண்டமணி, செந்தில்
1985 இதயகோயில் கவுண்டமணி, செந்தில்
1989 கரகாட்டகாரன் கவுண்டமணி, செந்தில்
1991 சின்னத் தம்பி கவுண்டமணி

இயக்குநராக

ஆண்டு திரைப்படம் நடிகர்கள்
1980 தெய்வீக ராகங்கள் ஸ்ரீகாந்த், ரோஜா ரமணி, வடிவுக்கரசி .

கதை எழுத்தாளராக

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஏ._வீரப்பன்&oldid=20866" இருந்து மீள்விக்கப்பட்டது