தெனாலி ராமன் (1956 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தெனாலி ராமன்
இயக்கம்பி. எஸ். இரங்கா
தயாரிப்புபி. எஸ். ரங்கா விக்ரம் புரொடக்ஷன்ஸ்
கதைசி. கே. வெங்கடராமைய்யா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
என். டி. ராமராவ்
டி. என். துரைராஜ்
ஜமுனா
சித்தூர் வி. நாகையா
பானுமதி ராமகிருஷ்ணா
ஒளிப்பதிவுபி. எஸ். ரங்கா
வெளியீடு1956
ஓட்டம்195 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெனாலி ராமன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். இரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என். டி. ராமராவ், ஜமுனா, சித்தூர் வி. நாகையா, பானுமதி ராமகிருஷ்ணா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விகடகவி தெனாலி ராமனின் கதையை, அதே பெயரில் எடுத்துள்ளனர். தெனாலிராமன் கிருஷ்ண தேவராயனின் அமைச்சரவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் அமைச்சரவைக் குழுவில் ஒருவராக இருந்தார்.[1] விசயநகர பேரரசின் மன்னரான கிருஷ்ணதேவராயரின் அவையில் இருந்த தெனாலி ராமனினின் வாழ்க்கையையும் இக்கதை விவரிக்கிறார். விசயநகர சாம்ராஜ்யத்தை ஆக்கிரமிக்க முயற்சிக்கும் பாமினி சுல்தானால் அனுப்பப்படும் வேசி கிருஷ்ணாசிரி கிருஷ்ண தேவராயரை மயக்கி தன் வளைக்குள் வீழ்த்துகிறாள். கிருஷ்ண தேவராயர் நாட்டை சூழ்ந்துள்ள போர் மேகங்களையும், நாட்டு நிர்வாகத்தையும் மறந்து தாசியின் மாயவலையில் இருக்கிறார். இதில் இருந்து ராயரையும் நாட்டையும் காப்பாற்ற ராமன் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டு தாசியிடம் இருந்து மன்னரை மீட்கிறான். படை திரட்டிவரும் பீசாபூர் சுல்தானுக்கு போரில் உதவியாக பாபர் யானைப்படையை அனுப்புவதை அறிந்து சமயோசிதமாக பாபரை சந்தித்து, பீசாபூர் சுல்தானுக்கு ஆதரவளிப்பதை தடுத்து, போரில் விசயநகர பேரரசு வெற்றிகொள்ளப்படுவதில் இருந்து காக்க ராமன் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியதாக இந்தப்படம் உள்ளது.

Cast

ஆண் நடிகர்கள்
பெண் நடிகர்கள்

தயாரிப்பு

தனது முதல் தயாரிப்பு முயற்சியான "மா கோபி" (1954) என்ற படம் வெற்றி பெற்ற பிறகு, பி. எஸ். இரங்கா 14 ஆம் நூற்றாண்டின் தெலுங்குக் கவிஞரும் அறிஞருமான தெனாலிராமனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை தயாரித்து இயக்க விரும்பினார். தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் சிறிது மாற்றப்பட்ட நடிகர்களுடன் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் ஒரு பன்மொழி திரைப்படமாக அவர் திட்டமிட்டார்.[2] இரங்கா சமுத்ராலா ராகவாச்சார்யா, கண்ணதாசன் மற்றும் முருகதாஸுடன் இணைந்து இரண்டு பதிப்புகளுக்கான அடிப்படை திரைக்கதையை உருவாக்கினார்.[2] ஹெச். எம். ரெட்டியின் 1941 தெலுங்குப் படத்தின் அதே பெயரின் கதையைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, சி. வெங்கடராமையாவின் கன்னட மேடை நாடகமான தெனாலிராமகிருஷ்ணாவை ஒரு திரைப்படமாக மாற்ற முடிவு செய்தனர்.[1] இரங்கா படத்திற்கு தமிழில் தெனாலிராமன் என்று பெயரிட்டார்.[3] தெலுங்கு பதிப்பிற்கு தெனாலி ராமகிருஷ்ணா என்ற பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.[2] 1938 இல் வெளிவந்த தெனாலிராமன் படத்திற்குப் பிறகு தெனாலிராமனை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது தமிழ் திரைப்படம் இதுவாகும்.[4]

நடிகர்களும் படக்குழுவினரும்

சிவாஜி கணேசனை தமிழில் ராமனாக நடிக்க ரங்கா நடிக்க வைத்தார். அவருக்குப் பதிலாக தெலுங்கு பதிப்பில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் தெனாலிராமனாக நடித்தார்.[2] என்.டி.ராமாராவ், வி. நாகையா ஆகியோர் கிருஷ்ணதேவராயராகவும் அவரது அமைச்சராகவும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[5] M. N. நம்பியார் இராச்சியத்தின் அரசகுரு பாத்திரத்தில் நடித்தார். அவருக்குப் பதிலாக தெலுங்கு பதிப்பில் முக்கமாலா நடித்தார்.[2] இரங்கா பானுமதியை கிருஷ்ணனாக நடிக்கவைக்க அனுகினார். ஆரம்பத்தில் ஆர்வமில்லாமல் இருந்த பானுமதி, முன்னாள் தயாரிப்பு நிறுவனத்தால் பரணி பிக்சர்ஸ் தயாரித்த படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இருந்த இரங்காவின் பணியை கருத்தில் கொண்டு இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.[5] சுரபி பாலசரஸ்வதி, ஜமுனா மற்றும் மாஸ்டர் வெங்கடேஷ்வர் ஆகியோர் முக்கிய துணை வேடங்களில் நடித்துள்ளனர்.[3]

இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரண்டு பதிப்புகளுக்கும் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[2] இயக்குவதைத் தவிர, இரங்கா ஒளிப்பதிவு இயக்குநராகவும் பணியாற்றினார். பி ஜி மோகன் படத்தைத் தொகுத்தார். வாலி மற்றும் கங்கா கலை இயக்குனர்களாக இருந்தனர். சோப்ரா மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் நடனக் காட்சிகளுக்கு நடன இயக்குநர்களாக இருந்தனர்.[6][6]

வெளியீடும் விமர்சனமும்

தெலுங்கு பதிப்பிற்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தப்படம் 3 பிப்ரவரி 1956 அன்று வெளியிடப்பட்டது.[5] கண்ணதாசன், தெனாலிராமனின் கழுத்து ஆழமாக புதைக்கப்பட்டு, யானையால் மிதிக்க இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, 'கணேசனின் எதிர்காலம்' என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டார்.[7] தி இந்து, "இது பார்க்கத் தகுந்த ஒரு படம் .... வளமான நடிப்பின் அடிப்படையில், (குறிப்பாக மையப் பாத்திரத்தில் [சிவாஜி] கணேசனிடமிருந்தும், மற்றவர்களிடமிருந்தும்) உயர்வான கதை, பறந்த மொழி, ஈர்க்கக்கூடிய பின்னணியால் ரசிக்கத்தக்க வகையில் இருக்கிறது" என எழுதியது. " இந்தியன் எக்சுபிரசு, ".... மிகவும் பொழுதுபோக்கு படம். பாரம்பரிய பாணியில் இசைக்கப்பட்ட சில பாடல்கள் மகிழ்ச்சியளிக்கின்றன. சில பொழுதுபோக்கு நடனங்கள் படத்தின் பொழுதுபோக்கு மதிப்பை அதிகரிக்கிறது" என எழுதியது." தி மெயில், "நகைச்சுவையான உரையாடல்கள், பல மகிழ்ச்சியான நடனங்கள், பாடல்களுடன் படம் பொழுதுபோக்காக உள்ளது" என்றது. தி ஸ்கிரீன், "திரையில், "[சிவாஜி] கணேசன் தெனாலிராமனின் பாத்திரத்தை மிகச் சிறப்பாக சித்தரிக்கிறார். படம் பார்க்கும் அனைத்துப் பிரிவினரையும் படம் ஈர்க்கும்" என்றும் எழுதியிருந்தது.[8]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Rajadhyaksha, Ashish; Willemen, Paul (1998) [1994]. Encyclopedia of Indian Cinema (PDF). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 348. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563579-5.
  3. 3.0 3.1 "Vikraman's Proudest Presentation". இந்தியன் எக்சுபிரசு: p. 3. 8 February 1956. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19560208&printsec=frontpage&hl=en. 
  4. Gupta, Rinku (21 May 2013). "Vadivelu gets 60's style return tune". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/entertainment/tamil/2013/may/21/Vadivelu-gets-60s-style-return-tune-479405.html. 
  5. 5.0 5.1 5.2 Narasimham, M. L. (14 November 2014). "Tenali Ramakrishna (1956)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 September 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160930110242/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/tenali-ramakrishna-1956/article6596304.ece. 
  6. 6.0 6.1 Film News Anandan (2004). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru [Tamil film history and its achievements] (in Tamil). Chennai: Sivagami Publishers. Archived from the original on 10 April 2019. பார்க்கப்பட்ட நாள் 3 ஆகஸ்ட் 2021. {{cite book}}: Check date values in: |access-date= (help); More than one of |archivedate= and |archive-date= specified (help); More than one of |archiveurl= and |archive-url= specified (help)CS1 maint: unrecognized language (link)
  7. Kannan, R. (28 June 2017). MGR: A Life. India: Penguin Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-86495-88-4. Poet Kannadasan published a still from Ganesan's Tenaliraman (1956), for which he had penned the dialogues, showing Ganesan buried neck deep, waiting to be trampled by an elephant, with the caption 'Sivaji Ganesan's Future'.
  8. "Acclaimed by the public.. Applauded by the press..". இந்தியன் எக்சுபிரசு (Madras) XXIC No. 118: pp. 1. 17 February 1956. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19560217&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்