ஆயிரம் ரூபாய் (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஆயிரம் ரூபாய்
சுவரிதழ்
இயக்கம்கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
தயாரிப்புசின்ன அண்ணாமலை
கால் சித்ரா
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
சாவித்திரி
வெளியீடுதிசம்பர் 3, 1964
நீளம்4484 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆயிரம் ரூபாய் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 3 திசம்பர் 1964 அன்று வெளியானது.

கதை

தற்கொலை எண்ணதில் உள்ள சந்தானம் (ஜெமினி கணேசன்) ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றுகிறான். குழந்தையின் தாய் ரேவதி (ராகினி) அவருக்கு அறிவுரை கூறி அனுப்புகிறாள். இதனால் மனம் மாறும் சந்தானம் தொடருந்தில் பல்பொடி விற்று வருகிறான். கூத்து கட்டும் வள்ளியைக் (சாவித்திரி) காதலிக்கிறான். இதற்கிடையில் ஆயிரம் ரூபாய் நோட்டு இவர்கள் வாழ்க்கையில் குறுகிடுகிறது. இவர்கள் வாழ்வில் ஒன்றிணைந்தார்களா இல்லையா என்பதே கதை.

படிப்பு

பாடல்

இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார் பாடல் வரிகளைand கண்ணதாசன், அ. மருதகாசி, வாலி ஆகியோர் எழுதினர்.[1][2]

பாடல் பாடகர்(கள்) வரிகள் நீளம்
"அம்மா இல்லே அப்பா" எஸ். ஜானகி வாலி 03:25
"ஆனாக்கா அந்த மடம் ஆவாட்டி சந்தை மடம்" பி. சுசீலா அ. மருதகாசி 03:19
"பற்பொடி கல்நார் பற்பொடி" பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா அ. மருதகாசி 03:52
"பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னைப் போல பார்க்கல" பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா கண்ணதாசன் 03:30
"நிலவுக்கும் நிழல் உண்டு" பி. சுசீலா கண்ணதாசன் 03:27

வெளியீடும் வரவேற்பும்

ஆயிரம் ரூபாய் 3 திசம்பர் 1964 அன்று வெளியானது.[3] நவம்பர் 3 (தீபாவளி) வெளியிட திட்டமிடப்பட்ட இப்படம் ஒரு மாதம் தாமதமாகதான் வெளியானது.[4] 12 திசம்பர் 1964 அன்று, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், "மில்லியன் பவுண்டு நோட் என்ற ஆங்கிலப் படத்தை தழுவி உருவாக்கப்பட்ட, ஆயிரம் ரூபாயில் ஓரளவு பாராட்டத்தக்க அம்சம் உள்ளது. படத்தில் உள்ள ஆயிரம் ரூபாய் நோட்டு போலியானது, அதனால் அது பொழுதுபோக்கையும் தருகிறது".[5] கல்கியில் எழுதும் எஸ்.வி.கண்ணன், சாவித்திரி படத்தைத் தன் தோளில் சுமந்தார் என்றார்.[6]

மேற்கோள்கள்