ஆர். செல்வராஜ்
"அன்னக்கிளி" செல்வராஜ் என்று அழைக்கப்படும் ஆர். செல்வராஜ் (R. Selvaraj) என்பவர் இந்தியத் திரைக்கதை எழுத்தாளரும் இயக்குநருமாவார்.[1] இவர் முதன்மையாக தமிழ் திரையுலகிலும், சில தெலுங்குத் திரைப்படத்துறையிலும், கன்னடத் திரைப்படத்துறையிலும் பணியாற்றியுள்ளார்.[2] இவரது மிகவும் பிரபலமான படம் அன்னக்கிளி ஆகும்.[3] செல்வராஜ் இயக்கத்தில் 1979ஆம் ஆண்டு வெளியான அகல் விளக்கு படத்தின் மூலம் விஜயகாந்தின் திரையுலக வாழ்க்கை தொடங்கியது. செல்வராஜ் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோருடன் நெருக்கமாக பணியாற்றியுள்ளார். இவரது மகன் தினேஷ் செல்வராஜும் ஒரு திரைப்பட இயக்குநராவார். அவர் துப்பாக்கி முனை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.[4]
ஆர். செல்வராஜ் | |
---|---|
பிறப்பு | சிவகங்கை, மதுரை மாவட்டம் (தற்போதைய சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு), சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1974–தற்போது |
வாழ்க்கைத் துணை | சாவித்திரி |
உறவினர்கள் | ந. சங்கரய்யா, ஸ்ரீதேவி |
திரைப்படவியல்
கதை
- எங்கம்மா சபதம் - 1974
- அம்மயில சபதம் - 1975 (தெலுங்கு)
- அன்னக்கிளி - 1976
- கவிக்குயில் - 1977
- கிழக்கே போகும் ரயில் - 1978
- புதிய வார்ப்புகள் - 1979
- தூர்பு வெல்லே ரயிலு - 1979
- கொத்த ஜீவிதாலு - 1980 (தெலுங்கு)
- நன்ன தேவரு - 1982 (கன்னடம்)
- புதுமைப் பெண் - 1984
- இதயகோயில் - 1985
- உதயகீதம் - 1985
- முதல் மரியாதை - 1985
- கீதாஞ்சலி - 1985
- பாடு நிலாவே - 1987
- கொடி பறக்குது - 1988
- சோன் பெ சுஹாகா - 1988 (இந்தி)
- புது நெல்லு புது நாத்து - 1991
- புது மனிதன் - 1991
- சின்ன கவுண்டர் - 1992
- சின்ராயுடு - 1992 (தெலுங்கு)
- கேப்டன் மகள் - 1993
- சக்கரைத் தேவன் - 1993
- கோயில் காளை - 1993
- ராசைய்யா - 1995
- அந்திமந்தாரை - 1996
- மொம்மகா - 1997 (கன்னடம்)
- அக்னி ஐபிஎஸ் - 1997 (கன்னடம்)
- அழகர்சாமி - 1999
- தாஜ்மகால் - 1999
- அலைபாயுதே - 2000
- பொட்டு அம்மன் - 2000
- ஈர நிலம் - 2003
- ரிபெல் - 2015 (கன்னடம்)
இயக்கம்
- பொண்ணு ஊருக்கு புதுசு - 1979
- அகல் விளக்கு - 1979
- பகவதிபுரம் ரயில்வே கேட் - 1983
- நீதானா அந்தக்குயில் - 1986
- சிகப்பு நிறத்தில் சின்னப்பூ - 1990
மேற்கோள்கள்
- ↑ "கடல் தொடாத நதி - 5". 22 April 2017. https://www.vikatan.com/oddities/miscellaneous/130576-cinema-history-of-annakili-selvaraj.
- ↑ "பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு கதை எழுதிய அன்னக்கிளி செல்வராஜ் | Annakili selvaraj wrote above 100 stroy in cinema". 28 January 2017. https://cinema.dinamalar.com/tamil-news/55612/cinema/Kollywood/Annakili-selvaraj-wrote-above-100-stroy-in-cinema.htm.
- ↑ Saturday, May 11, 2019 - 18:20 (2019-05-11). "43 years of 'Annakili': Devaraj-Mohan's film is still a riveting watch". The News Minute. https://www.thenewsminute.com/article/43-years-annakili-devaraj-mohan-s-film-still-riveting-watch-101638.
- ↑ "Kathikappal preview - Behindwoods.com CAST Anup Kalyani DIRECTION Dinesh Selvaraj PRODUCTION V Bhaktha MUSIC Sree Sai R Sahitya hot images tamil picture gallery images". http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/kathikappal-preview.html.