வழிநூல் சார்பு நூல்களுக்குச் சிறப்புவிதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

வழிநூல், சார்புநூல் எழுதுபவர்கள் முன்னோர் கூறிய விதிகளின்படி நூல் எழுதினாலும் குறிப்பிட்ட ஒரு நூலைத் தழுவி எழுதப்பட்டது என்பதற்கு அடையாளமாக முதல்நூலை மேற்கோள் காட்டி எழுதவேண்டும் என்று நன்னூல் வற்புறுத்துகிறது[1]

அடிக்குறிப்பு

  1. . முன்னோர் மொழிபொருளே அன்றி அவர்மொழியும்
    பொன்னேபோல் போற்றுவம் என்பதற்கும்-முன்னோரின்
    வேறுநூல் செய்தும் எனும் மேற்கோள் இல் என்பதற்கும்
    கூறுபழம் சூத்திரத்தின் கோள் (நன்னூல் 9)


வெளி இணைப்புகள்