முடத்தெங்கின் தன்மை
Jump to navigation
Jump to search
முடத்தெங்கின் தன்மை என்பது நன்னூல் சுட்டிக்காட்டும் ஆசிரியராகாதவர் இயல்புகளில் ஒன்று ஆகும்.
வேலிக்கு அப்பால் வளைந்த தென்னைமரம் தனக்கு நீர் ஊற்றி போற்றிப் பாதுகாத்து வளர்த்தவர்களுக்குப் பயன்தராமல் மற்றவர்களுக்குப் பயந்தருகின்ற இயல்பு கொண்டதாகும். அதேபோல் தனக்குப் பொருள் முதலியன கொடுத்து வழிபாடு செய்வதில் தவறாத மாணவர்களுக்குத் தம்மிடம் உள்ள கல்வியைத் தராமல் அடுத்தவர்க்கு கொடுக்கும் ஆசிரியர்கள் முடத்தெங்கைப் போன்றவர்கள் , இவர்களை ஆசிரியர்கள் என்று அழைக்கக்கூடாது என்கிறது நன்னூல்.[1]